சாலையில் திடீரென உங்களுக்கு பணம் கிடைத்தால் அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா?
பொதுவாக சில சமயங்களில் சாலையில் நாம் நடந்து செல்லும் போது கீழே பணம் விழுந்து கிடப்பதை பார்த்திருப்போம். வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த சூழ்நிலையை பெரும்பாலானவர்கள் அனுபவித்திருக்க கூடும்.
இவ்வாறு கீழே கிடக்கும் பணத்தினை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் பெரும்பலானவர்கள் மனதில் எழுந்திருக்கும்.

அந்தவகைளில் சாலையில் பணத்தை கண்டால், எடுப்பது நல்லதா கெட்டதா? என்பது குறித்து ஆன்மீக ரீதியில் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் விரிவாக பாரக்கலாம்.
சாலையில் கிடக்கும் பணத்தை எடுக்கலாமா?
பொதுவாக ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில், தெருவில் பணத்தை பார்ப்பது மிகவும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. காரணம் இந்து மத நம்பிக்கைகளின் படி பணமானது லட்சுமி தேவியின் வடிவமாகவே பார்க்கப்படுகின்றது.

எனவே பணம் கிடைக்கும் போது அன்னை லட்சுமி அவனை ஆசிர்வதிப்பாள் என்பதை அறிய வேண்டும். அவருடைய வாழ்க்கையில் இருந்த நிதிப் பிரச்சனைகள் மிக விரைவில் நீங்கப்போகின்றது என்பதன் அறிகுறியாகவே சாலையில் இருந்து அதிர்ஷ்டவசமாக பணம் கிடைக்கும்.
என்ன செய்வது?
அவ்வாறு கிடைக்கும் பணம் அதிர்ஷ்த்தின் அடையாளமாக பார்க்கப்பட்டாலும், அதனை நாம் சம்பாதிக்கவில்லை என்பதால், அதனை எடுத்து செலவு செய்யலாமா? என்ற கேள்வி இருக்கும்.

ஆனால் பணம் சாலையில் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது என்று ஆன்மீக ரீதியில் சில ஐதீகங்களும் காணப்படுகின்றன.
வீட்டைவிட்டு வெளியில் கிளம்பும் போது பணம் கிடைத்தால், அதை அலுவலகத்தில் வைத்துக்கொள்ளலாம் அதனை செலவு செய்ய கூடாது.

வீட்டுக்கு திரும்பும் போது பணத்தை கண்டெடுக்கின்றீர்கள் என்றால், அதனை கோவில் உண்டியலில் போடலாம் அல்லது உங்கள் பர்ஸில் செலவு செய்யாமல் வைத்துக்கொள்ளலாம். இது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை கொடுக்கும்.
சாலையில் கிடைக்கும் பணத்தை முடிந்தவரையில் உரியவரிடம் சேர்க்க முயற்ச்சிக்க வேண்டும். அது பவனளிக்காத போது அதனை எடுத்து வைத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் சாலையில் கிடக்கும் பணத்தை கண்டுக்கொள்ளாமல் செல்ல கூடாது. இது லட்சுமி தேவியை அவமதிப்பதாக கருதப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |