கனவில் அடிக்கடி பாம்பை காண்கின்றீர்களா? என்ன காரணம்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையேனும் கனவு கண்டிருப்பார்கள்.
கனவு காண்பது என்பது இயல்பான ஒன்று தான். ஆழ்மனதில் உள்ள வெளியில் சொல்லப்படாத உணர்வுகள் மற்றும் ஆசைகளின் வெளிப்பாடு தான் கனவுகள்.
அது நல்ல நிகழ்வாகவும் இருக்கலாம் அல்லது கெட்ட நிகழ்வுகளாகவும் இருக்கலாம். நம்மில் பலர் பாம்பு குறித்து கனவு கண்டிருப்போம். ஆனால், அதற்கு அர்த்தம் என்ன என நம்மில் பலருக்கு தெரியாது.
கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் பாம்புகளை எந்த வகையில் கனவில் பார்க்கின்றோமோ அதற்கு ஏற்றாற் போல் தான் அதன் பலன்களும் அமையும். இது தொடர்பில் முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பு பற்றிய கனவுகளின் பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவருடைய ஜாதகத்தில் ராகுதிசை நடைப்பெற்றால் அவர்களுடைய கனவில் பாம்பு அடிக்கடி தோன்றும். மேலும் உளவியளின் பிரகாரம் பாம்பு படுக்கையில் இருப்பதை போல் கனவு வந்தால் பாலியல் ஆசைகளின் வெளிப்பாடாக கருதப்படுகின்றது.
பாம்பு தொடர்பான கனவுகள் அடிக்கடி ஏற்பட்டால் குலதெய்வ வழிப்பாடு குறித்து உங்களுக்கு நினைவுப்படுத்துவதாக பார்க்கப்படுகின்றது.
குலதெய்வத்துக்கு ஏதாவது பூஜை செய்வதாக வேண்டிக்கொண்டு அதனை மறந்துவிட்டால் இவ்வாறான கனவுகள் தோன்றும்.
பாம்பு விரட்டுவதை போன்ற கனவு ஏற்படுவது வறுமை சூழ போகின்றது என்பதை முன்கூட்டியே எச்சரிப்பதாக கருதப்படுகின்றது. இந்த கனவு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள்.சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது ஆபத்தை குறைக்கும்.
பாம்பு உங்கள் காலைச்சுற்றி பின்னிக்கொள்வது போன்ற கனவு வந்தால் சனிபகவான் உங்களை ஆக்கிரமிக்கப்போவதன் வெளிப்பாடாக பார்க்கப்படுகின்றது.
அதுவே பாம்பு கடிப்பதை போன்ற கனவு ஏற்பட்டால், அது நல்ல சகுனமாக கருதப்படுகின்றது.நீண்ட நாட்கள் இருந்த கஷ்டங்களுக்கு தீர்வு வரப்போகின்றது என்பதே இந்த கனவின் அர்த்தம்.
இப்படி கனவு கண்டால், தீராத கடன் பிரச்சினைகள் நீங்கி வாழ்வில் நல்ல காலம் ஆரம்பமாகும்.
பாம்பு வீட்டிற்குள் வந்து அமைதியாக வெளியே செல்வதை போல் கனவு வந்தால், நீங்கள் வேண்டிய நேத்திக்கடன் ஒன்றை மறந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
பாம்பு உங்களின் தலைக்கு மேல் குடை பிடிப்பது போன்ற கனவு தோன்றினால் கடவுளின் ஆசீர்வாதம் உங்கள் மீதும் உங்களின் குடும்பத்தினர் மீதும் ழுமுமையாக இருக்கின்றது என்று அர்த்தம்.
பாம்பு யார் மீதாவது ஏறிச்செல்வது போல் கனவு தோன்றினால் தொழில் ரீதியில் முன்னேற்றம் ஏற்பட போகின்றது என்றும் பதவி உயர்வு கிட்டப்போகின்றது என்றும் அர்த்தம்.
கனவில் பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்து கிடப்பதை போல் கண்டாலோ உங்களுக்கு வரவிருந்த பெரிய ஆபத்து நீங்கிவிட்டது என்று அர்த்தம். இருப்பினும் எல்லா விடயங்களிலும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பாம்பை கையில் பிடிப்பதை போன்று கனவு தோன்றினால் அதிர்ஷ்டம் கிடைக்கப்பபோகின்றது என்று அர்த்தம். வாழ்வில் செல்வசெழிப்பு அதிகரிக்கப்போகின்றது என்பதே இதன் பொருள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |