பரம எதிரிகளாக இருக்கும் பாம்பும் கீரியும்... காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக பாம்புகளுக்கும் கீரிகளுக்கும் பகை இருப்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.
யாராவது இருவர் சண்டையிட்டு கொள்ளும் போது கூட கீரியும் பாம்பும் போல என்ற உவமை சொல்லப்படுவதை கேட்டிருப்பீர்கள்.
கீரியும் பாம்பும் ஏன் சண்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று பலருக்கு கேள்வி இருக்கும். அது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா?
இதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலும் பாம்புகளில் காணப்படும் விஷம் கீரியை பாதிக்காது எனக் கூறப்படுகிறது.
இது தவிர, கீரி மிகவும் சுறுசுறுப்பானது, அது பாம்பிடமிருந்து தப்பிக்க பல வகையான சூழ்ச்சிகளை பின்பற்றுகிறது.
மேலும் பொரும்பலான சண்டையில் கீரியே வெல்கிறது.சண்டையில் களைத்துப் போன பாம்பின் தலையை குதறி கொன்று விடுகிறது. சில சமயம் ராஜ நாகங்கள் கூட கீரிகளிடம் பழியாகுகின்றன.
பகைக்கு என்ன காரணம்?
கீரி தனது குட்டிகளை காக்க போராடுகிறது பாம்பை தாக்காமல் விட்டு விட்டால், தன் குழந்தைகளை அதாவது சிறிய கீரிகளை கடித்து தின்றுவிடும் என்று கீரி நினைப்பதாக சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில் பாம்புகளுக்கு கீரி குட்டிகளை உணவாக உண்பது மிகவும் பிடிக்கும், இதனால் தான் கீரி தனது குழந்தைகளை காப்பாற்ற பாம்புகளுடன் சண்டையிடுகிறது என அவர்கள் கருதுகின்றனர்.
அதே நேரத்தில், சில ஆய்வுகள் பாம்புகள் மற்றும் கீரிகள் இயற்கை எதிரிகள் என்று குறிப்பிடுகின்றது. பாம்பு கீரியைக் கொல்ல விரும்புகிறது.
பாம்பு தான் மட்டுமே வாழ வேண்டும் எனவும் கீரி தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பதே இந்த பகைக்கு காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும், இயற்கையான எதிரி என்பதற்கு ஆதரவான வாதத்தை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் கீரி பல சிறிய விலங்குகளை வேட்டையாடுவதில்லை என்றும் ஒரு கருத்து காணப்படுகின்றது.
கீரியின் உடலில் அசிடைல்கொலின் ரிஃப்ளெக்ஸ் உள்ளது. எனவே அது பாம்பு விஷத்தில் இருக்கும் நியூரோடாக்சினில் இருந்து தன்னை பாத்துக்கொள்கின்றது.
கீரியின் டிஎன்ஏவில் இருக்கும் ஆல்பா மற்றும் பீட்டா பிளாக்கர்ஸ் விஷத்தின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள துணைப்புரிகின்றது.
பாம்புக்கும் கீரிக்கும் உள்ள பகை பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது உண்மைதான். ஆனால் இந்தப் பகைக்கு உறுதியான ஆதாரம் இதுவரையில் கிடைக்கவில்லை. கீரிக்கும் பாம்புக்கும் இடையிலான சண்டையில் 80 சதவீதம் கீரிகளே வெற்றிபெறுகின்மை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |