திருமண வாழ்க்கை இறுதிவரை மகிழ்ச்சியாக இருக்கணுமா? சாணக்கியர் கூறும் 4 வழிகள்!
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை என்று சொன்னால் மிகையாகாது. சாணக்கியர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நிம்மதியளிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றால் அவசியம் பின்பற்ற வேண்டிய விடயங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.

பரஸ்பரம் மரியாதை அளித்தல்
சாணக்கியரின் கருத்து படி திருமண வாழ்வில் எது இல்லாவிட்டாலும், கணவன் மனைவிக்கு இடையல் மரியாதை இருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிடுகின்றார்.
ஒரு வண்டி ஓடுவதற்கு இரண்டு சக்கரங்கள் ஒன்றாக செயல்பட வேண்டியது எந்தளவுக்கு அவசியமோ திருமண உறவில் ஒருவருக்கொருவர் மதித்து நடக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
திருமண வாழ்க்கையில் துணையின் கருத்துக்கள், எண்ணங்கள், உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும். இந்த குணம் கணவன் மற்றும் மனைவி இருவரிடமும் இருந்தால் அந்த திருமண வாழ்க்கை இறுதிவரையில் மகிழ்ச்சியை கொடுக்கும்.

தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாத்தல்
திருமணம் செய்த பின்னர் ஒவ்வொரு தம்பதிகளுக்கும் அவர்களுக்கென்று சில தனிப்பட்ட ரகசியங்கள் இருக்கும். அதனை எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ளவே கூடாது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
கணவன் மனைவி தங்கள் தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயங்களை எந்த ஒரு மூன்றாம் நபரிடமோ, நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ சொல்வது தான் திருமண உறவில் விரிசல் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும். இந்த குணத்தை தவிர்க்கும் தம்பதிகளின் திருமண வாழ்வில் இறுதிவரை மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிலைத்திருக்கும்.

அகங்காரத்தை தவிர்த்தல்
திருமண உறவில் இருக்கும் பெரிய எதிரி ஈகோ தான் என சாணக்கிய நீதியில் வலுவாக குறிப்பிடப்படுகின்றது. கணவன் மனைவிக்கு இடையில் அகங்காரத்தை மட்டும் ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
கணவன் மனைவி இருவரில் யார் வயதில் பெரியவராக இருந்தாலும் சரி, மனதளவில் இருவரும் சமமானவர்கள் என்ற எண்ணத்தில் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும். இந்த குணம் இருந்தல் திருமண வாழ்வில் மகிழ்ச்சிக்கு ஒருபோதும் பஞ்சமே இருக்காது.

பொறுமையுடன் செயல்படுதல்
திருமண வாழ்க்கையின் வெற்றிக்கு கணவன் மனைவி இருவரிடமும் பொறுமை இருக்க வேண்டியது மிக மிக முக்கியம் என சாணக்கியர் வலியுறுத்துகின்றார்.
வாழ்க்கையில் என்ன நடந்தாலும், எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு கொடுத்து பொறுமையுடன் அதிலிருந்து வெளிவர முயற்சிக்க வேண்டும்.
இன்பத்தை எப்படி பகிர்ந்துக்கொள்ள முடிகின்றதோ, அது போல் கஷ்டத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் குணம் இருவரிடமும் இருக்கும் பட்சத்தில் திருமண வாழ்வில் கவலைக்கு இடமே இருக்காது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |