KING COBRA : ராஜ நாகங்கள் எதை சாப்பிடும்னு தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!
பொதுவாக பாம்புகள் என்றால் அனைவருக்குமே நிச்சயம் பயம் இருக்கும். அதிலும் சிலர் பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே அலறியடித்து ஓடுவார்கள்.
இதற்கு முக்கிய காரணம் அதன் கொடிய விஷம் தான். எந்தப் பாம்புகள் அதிக விஷமுள்ள பாம்புகள் என்று கேட்டால், இயல்பானவே முதலில் நினைவுக்கு வரும் பெயர் ராஜ நாகம் தான். இதனை ஆங்கிலத்தில் king cobra என குறிப்பிவார்கள்.
உலகிலேயே மிகவும் ஆபத்தான பாம்புகளில் பட்டியலில் இது முக்கிய இடம் பிடிக்கின்றது. கிங் கோப்ரா மனிதர்களைத் தாக்குவதன் நோக்கம் இரைக்காக அல்ல.
மூளை வளர்ச்சி முதல் தோல் பிரச்சனை வரை தீர்வு கொடுக்கும் வைட்டமின் பி6: எந்த பழங்களில் அதிகம்னு தெரியுமா?
மனிதர்களிடமிருந்து தன்மை பாதுகாத்துக்கொள்ளவே மனிதர்களைக் கடிக்கிறது. ஆனால் மனிதர்களை ஒருபோதும் சாப்பிடுவது கிடையாது. அப்படியென்றால் அது வேறு எதை தான் உணவாக கொள்கிறது என சிந்தித்திருகீன்றீர்களா?
ராஜ நாகத்தின் உணவு
பொதுவாகவே பாம்புகள்டி என்றால் எலிகள் தவளைகளைகள் மற்றும் பறவைகளின் முட்டைகள் போன்றவற்றை தான் இரையாக உட்கொள்ளும்.
ஆனால் கிங் கோப்ரா வகை பாம்புகள் இவற்றை சாப்பிடுவதில்லை. ராஜ நாகங்கள் சற்று தனித்துவமான பாம்பினமாகும். இவை மற்ற பாம்புகளை தான் விரும்பி சாப்பிடும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
அப்படி ஏனைய பாம்புளை உண்ணும் போது அந்த பாம்பும் கொடிய விஷத்தை கொண்டிருந்தாலும் ராஜ நாகங்கள் அவற்றை உணவாக உண்ணும். ராஜ நாகங்கள் வேட்டையின் போது விஷமுள்ள பாம்பு மற்றும் விஷதன்மை அற்ற பாம்புகள் என வேறுப்படுத்துவது கிடையாது.
ராஜ நாகங்கள் விரும்பி வேட்டையாடும் பாம்பு என்றால் அது ஆசிய எலிப் பாம்புதான். மேலும் இவை பல்லிகள், மற்ற சிறு உயிரினங்கள் அதன் முட்டைகள் ஆகியவைகளையும் உண்ணும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |