நாக்கில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உறுதி
பொதுவாகவே உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும் போது மாத்திரமே உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
உடல் ஆரோக்கியதாக இருக்கின்றதா என்பதை அறிந்துக்கொள்ள என்போதும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது.
உடலினுள் ஏற்படுள்ள பாதிப்புகளை நகம்,தோல், நாக்கு மற்றும் கண்களில் ஏற்படுகின்ற சில மாற்றங்களின் மூலமும் எளிமையாக கண்டுப்பிடிக்க முடியும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அந்தவகையில் நாக்கின் நிறம் மற்றும் அமைபில் ஏற்படுகின்ற மாற்றங்களானது எவ்வாறான ஆரோக்கிய பிரச்சினைகளுடன் தொடர்புடையது என்பது குறித்த விரிவான மருத்துவ விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான நாக்கு பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், இருப்பினும் அது அடர் மற்றும் வெளிர் நிறங்களில் சற்று மாறுபாடுகள் இருப்பது இயல்பு.
ஆரோக்கியமற்ற நாக்கு
ஆரோக்கியமற்ற நாக்கு வெள்ளை, சிவப்பு, கருப்பு அல்லது மஞ்சள் நிறமாகவும் வீங்கி மென்மையாகவும் இருக்கலாம். இது பல்வேறு நோய் அறிகுறிகளிடன் நேரடி தொடர்கை கொண்டுள்ளதாக அறியப்படுகின்றது.
மேலும் சாப்பிடும்போது, குடிக்கும்போது மற்றும் விழுங்கும்போது வலி, அத்துடன் புதிய கட்டிகள் மற்றும் புடைப்புகள் போன்ற கவலைக்குரிய பிற அறிகுறிகளும் இருக்குமாயின் இது முக்கிய ஆரோக்கிய பிரச்சிகைகளின் விளைவாக இருக்கலாம்.
வெள்ளை நாக்கு
நாக்கில் உள்ள அடர்த்தியான, வெள்ளைத் திட்டுகள் அல்லது கோடுகள் ஆரோக்கியமான நாக்கைப் பாதிக்கக்கூடிய மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும்.
சில காரணங்கள் பாதிப்பில்லாதவை, ஆனால், இந்த மாற்றத்தை கவனித்தால் உடனடியாக உங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.
காரணம் இது குறைந்த ஸ்டொமக் ஆசிட் அல்லது மோசமான செரிமானத்தின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
அதாவது உங்கள் உடலானது போதுமான HCL ஐ உற்பத்தி செய்யவில்லை. இது உணவை உடைப்பதற்கு அவசியமானது.
இது கேண்டிடா, அதிகப்படியான பூஞ்சை வளர்ச்சி அல்லது நாள்பட்ட சோர்வு ஆகியவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே நாக்கின் நிறத்தில் மாற்றங்கள் இருந்தால் முறையான மருத்துவ பரிசோதனை அவசியம்.
சிவப்பு நாக்கு
நாக்கு சில நேரங்களில் நாக்கில் வெள்ளை எல்லைகளுடன் கூடிய சிவப்புத் திட்டுகள் புவியியல் நாக்கு எனப்படும் ஒரு நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.
இந்தப் பெயர் நாக்கில் திட்டுகளின் வரைபடம் போன்ற தோற்றத்தைக் குறிக்கிறது.பி வைட்டமின் குறைபாடுகள் காரணமாக ஏற்படுகின்றது.
இது குறிப்பாக ஃபோலிக் அமிலம் (வைட்டமின் பி-9) மற்றும் கோபாலமின் (வைட்டமின் பி-12) ஆகியவற்றில் ஏற்படுகிறது.இந்த வைட்டமின் குறைபாடுகள் தீர்க்கப்படும்போது, இது தானாகவே மாறிவிடும்.
நாக்கில் விரிசல்
நாக்கில் விரிசல் ஏற்படுவது உடல் ஆரோக்கிய பிரச்சிகைகளின் முக்கிய அறிகுறியாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
இது நீரிழப்பு, குடல் அழற்சி, B2 (ரைபோஃப்ளேவின்) மற்றும் B3 (நியாசின்) போன்றவற்றின் குறைபாடுகள் காரணமாக தோற்றலாம்.
விரிசல் ஆழமாகவோ, வலியுடனோ அல்லது எரியும் உணர்வுகளுடன் இருந்தால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
எனவே நாக்கில் விரிசல் ஏற்பட்டால் நீரேற்றமாக இருக்க வேண்டும் என்றும், பி-காம்ப்ளக்ஸ் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நாக்கில் பேட்சி
நாக்கில் பேட்சிகள் போன்ற அமைப்பு அல்லது வெண்மையான திட்டுக்கள் இருந்தால், அதற்கு பாக்டீரியா, இறந்த செல்கள், வாய்வழி பூஞ்சை தொற்று, நீரிழப்பு, குறைவான நோயெதிர்ப்பு சக்தி போன்ற மற்றும் வைட்டமின் குறைப்பாடு பல்வேறு காரணங்கள் அடிப்படையாக இருக்கலாம்.
இந்த நிலையை முன்கூட்டியே கண்டறிய CRP, ANA, வைட்டமின் D மற்றும் ஜின்க் போன்ற பல சோதனைகளை மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
நாவில் ஏற்படும் மாற்றங்கள் குடல் பிரச்சினைகளில் ஆரம்பித்து வாய் புற்றுநோய் போன்ற பாரிய உயிர் கொல்லி நோய்களின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். எனவே இது குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |