பாம்புகளால் உண்மையிலேயே படம் பிடிக்க முடியுமா? பழி தீர்க்குமா!
பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த சில விடயங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பது வழக்கம். ஆனால் அனைவருமே அறிந்த சில விடயங்கள் உண்மையா இல்லையா என்ற குழப்பம் தொன்று தொட்டு இருந்துக்கொண்டே இருக்கும்.
அப்படிப்பட்ட விடை தெரியாத விடயத்தில் ஒன்று தான் பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்தும், பாம்புகள் தனக்கு தீங்கு இழைத்தவர்களை படமெடுத்து வைத்துக்கொள்ளும் மறு பிறவி எடுத்து பழிவாங்கும் என்ற கருத்தும் பரவலாக காணப்படுகின்றது.
இந்த விடயத்தில் எந்தளவு உண்மையிருக்கின்றது, பாம்புகளுக்கு உண்மையில் படமெடுக்கும் ஆற்றல் இருக்கின்றாதா? என்பது குறித்த அறிவியல் விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
உண்மை என்ன?
தமிழ் சினிமாவிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் குறிப்பாக நாக பாம்புகள் பழி வாங்குவது போன்ற காட்சிகளை ஒளி பரப்புகிறார்கள். உண்மையில், பாம்புகள் பழிவாங்குமா என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
ஒரு பாம்பின் கண்கள் கேமராவைப் போல படங்களைச் சேமிக்க முடியுமா?
பண்டைய காலங்களிலிருந்து, பாம்புகள் அனைத்து வகையான மர்மங்கள், கட்டுக்கதைகள் மற்றும் புதிர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நாட்டுப்புறக் கதைகள், மதம் மற்றும் சினிமாவில், இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்யும் அவற்றின் திறன் பார்ப்பவர்களையும் கேட்போரையும் வியப்பில் ஆழ்த்துகின்றது.
ஆனால் அறிவியல் ஆராய்ச்சிகளில் பிரகாரம், பாம்புகளுக்கு நினைவாற்றல் குறைவாக இருப்பதால், அவற்றால் நீண்ட நேரம் எதையும் நினைவில் வைத்திருக்க முடியாது.
எனவே, பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்து முழுமையான கற்பனையே. பாம்புகள் சம்பந்தப்பட்ட பழிவாங்கும் வழக்குகளுக்கோ அல்லது எந்த தலைப்பிலும் பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்துக்கோ எந்த அறிவியல் ஆதரவும் இதுவரையில் இல்லை என்பதே உண்மை.
பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்து வெறுமனே சமூக மூடநம்பிக்கைகள் மற்றும் உள்ளூர் நம்பிக்கைகளின் விளைவாகும்.
பாம்புகள் குறைந்த பார்வை கொண்டவை மற்றும் முதன்மையாக அவற்றின் நாக்கு மற்றும் பிற புலன் உறுப்புகளை நம்பியுள்ளன. அது அதிர்வுகளை கொண்டே இரையை உணர்கின்றது.
ஒரு பாம்பு இறப்பதற்கு முன் கடைசியாகப் பார்த்ததைப் பற்றிய படத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அனைத்து உயிரினங்களையும் போலவே, ஒரு பாம்பின் கண்களும் அதன் மூளையின் செயல்பாடுகளைப் பொறுத்தது.
ஒரு பாம்பு இறக்கும் போது, மூளை செயல்படாது; எனவே, அது இறந்த பிறகு அதன் கண்களில் எந்த "படத்தையும்" சேமிக்க முடியாது என அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன். எனவே பாம்புகளால் படத்தை சேமிக்க முடியும் என்பதும் அவை பழிவாங்கும் என்பதும் வெறும் மூடநம்பிக்கை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
