Neeya Naana: ஏலக்காய்னா என்னன்னு தெரியாதாம்மா? அரங்கத்தில் கொந்தளித்த கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் பெண் ஒருவர் ஏலக்காய் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறி அரங்கத்தையே சிரிக்க வைத்துள்ளார்.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்நிகழ்ச்சியினை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு இருதரப்பினராக பிரிந்து விவாதிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகி வருகின்றது.
இந்த வாரம் பட்டுப்புடவையினை விரும்பும் பெண்கள் மற்றும் பட்டுப்புடவையை விரும்பாத இளம்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் முந்தைய காலத்தில் பட்டுப்புடவை நிறத்தினை எவ்வாறு கூறுவார்கள்... தற்போது எவ்வாறு கூறுகின்றோம் என்பதை அழகாக எடுத்துக் கூறினார்.
அவர் ஏலக்காய் பச்சை என்று கூறியவுடன், கோபிநாத் எதிரே இருந்த பெண்கள் கூட்டத்தில் ஏலக்காய் என்று ஆரம்பித்த நிலையில் உடனே ஒரு பெண் ஏலக்காய் என்றால் என்ன்னு தெரியாது என்று கூறி கோபிநாத்தை சிரிக்க வைத்துள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |