பால் பொங்குவது எதனால் ? அறிவியல் காரணம் தெரியுமா?
பொதுவாகவே பாலும் சரி, தண்ணீரும் சரி திரவ வடிவில் தான் இருக்கின்றது. ஆனால் தண்ணீரை கொதிக்க வைக்கும் போது பொங்குவது கிடையாது.
அதே போல் பாலை கொதிக்க வைத்தால் பொங்கி வழிகின்றது இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா?
பால் பொங்குவதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் குறித்து தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்
சாதாரணமாக தண்ணீரை கொதிக்க வைக்கும் போது ஒரு கட்டத்தில் நீராவியாக மாறும். அவ்வாறு ஆவியாகும் நீர் வெளியேறிவிடுவதால் தண்ணீர் பொங்குவது கிடையாது.
ஆனால் இந்த பாலானது பொங்குவதன் காரணம். பாலில் புரதம், கொழுப்பு, கனிமங்கள் ,கார்போஹய்ட்ரேட்ஸ் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றது.
இவை அனைத்தும் பால் நன்கு சூடான பின்பு பால் ஆடையாக பாலின் மேற்பரப்பில் படிந்து பாலில் காணப்படும் நீரை வெளியேறவிடாமல் தடுக்கின்றது. அதன் காரணமாகவே பால் நன்றாக கொதித்த பின்னர் பொங்குகின்றது.
இவ்வாறு பால் பொங்கி வழிவதை தடுக்க அடுப்பு தீயின் அளவை குறைக்கலாம் அல்லது ஒரு கரண்டியால் பாலை கலக்கி விடுவதால் அந்த பால் ஆடையானது பிரிந்து பால் பொங்குவதை தடுக்க உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |