உங்களுக்கு பல் வலி ஏற்படுகிறதா? இந்த பிரச்சனை இருக்கலாம் ஜாக்கிரதை
பல் வலி என்பது எல்லோருக்கும் வரக்கூடிய பிரச்சனையாகும். இதை சிலர் கவனிக்காமல் புறக்கணிக்கின்றனர். பல் வலி ஏற்படுகின்றது என்றால் அதற்கான காரணம் நமது வாய்வழியில் பிரச்சனை இருப்பது தான்.
பல்லில் ஏற்படும் பிரச்சனையை கவனிக்காமல் அப்படியே விடுவதால் உடலில் பல்வேறு பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கும்.
பல்வலியை புறக்கணித்தால் நமது உடலிலும் சில பிரச்சனைகள் உண்டாகலாம் அவ்வாறான பிரச்சனைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பல்வலியினால் ஏற்படும் பிரச்சினை
1. வாய் குழியில் பிரச்சனை ஏற்படுவதால் தான் பல்வலி வருகின்றது. இதனால் பற்கள் சிதைவடைகின்றது. இது பற்களை சொத்தையாக்கும் பாக்டீரியாவால் ஏற்படுகின்றது.
இதற்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இது பெரிய பிரச்சனையாக மாறிவிடும். பற்களின் ஆழமான அடுக்குகளில் பரவ ஆரம்பித்து நரம்பு மற்றும் ரத்த நாளங்களில் கடுமையான வலியை ஏற்படுத்தும். பின்னர் பற்களை இழக்க கூடிய சூழ்நிலையும் எழும்.
2. பற்களின் ஈறுகள் பாதிக்கப்படும். இதனால் பற்களின் ஈறுகளில் வீக்கம் வருவதுடன் ரத்தப்போக்கும் ஏற்படுகின்றது.
இவ்வாறான நிலையில் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை காணவில்லை என்றால் பின்னர் இது பீரியண்டோன்டிடிஸாக முன்னேறி, ஈறுகளில் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தி எலும்பை பாதிக்கும்.
3. பல்வலி ஏற்படுத்தக்கூடிய காயத்தினால் ஒரு வகையான விஷம் உருவாகும். இதனால் வீக்கம் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரும்.
இந்த பிரச்சனை வாய் வழி குழிக்கு அப்பால் நீண்டு நமது உடலின் முக்கிய உறுப்புக்களி்ன் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
4. பல் வலியை கவனிக்காமல் விட்டால் இது நிறைய நாட்களுக்கு அப்படியே இருக்கும். இதனால் எம்மால் சாப்பிட முடியாது பேசுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் வரும்.
5. சாதாரண பல் வலி என்று கவனக்குறைவால் இருப்பதால் இருதய நோய்கள், சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் தாக்கும்.
வாய்வழி குழியிலிருந்து பாக்டீரியாக்கள் இரத்த ஓட்டத்தில் நுழைவதால் இது உடல் உறுப்பக்களை பாதிக்கும். இதற்காக நீங்கள் வைத்தியரிடம் முழுமையான சிகிச்சையை பெற்று கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |