தினமும் காலை ஒரே ஒரு கற்பூரவள்ளி பழத்தை சாப்பிடுங்க... ஆச்சரியமூட்டும் நன்மை கிடைக்கும்
அதிகமாக ஆரோக்கிய நன்மையை கொண்டுள்ள பழ வகைகளில் ஒன்றான கற்பூரவள்ளி பழத்தின் நன்மையை தெரிந்து கொள்ளலாம்.
கற்பூரவள்ளி
வாழைப்பழம் அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டு ஒரு பழமாக இருக்கின்றது. இந்த வாழைப்பழங்களில் பல வகைகள் காணப்படுகின்றது.
அவற்றில் ஒன்று தான் கற்பூரவள்ளி ஆகும். இதனை தேன் பழம் என்றும் அழைக்கப்படுகின்றது. அந்த அளவிற்கு அதிகமான இனிப்பு சுவை கொண்டுள்ள இப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் இதோ..
கற்பூரவள்ளி பழத்தின் நன்மைகள்
இப்பழத்தில் வைட்டமின்களான ஏ, பி6, சி சத்துக்களும், பொட்டாசியம், மெக்னீசியமும் நிறைந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் பி6 வயிற்றை நிறைவாக வைத்திருப்பதுடன் நீண்ட நேரம் பசி எடுக்காமலும், உடல் எடையை குறைக்கவும் செய்கின்றது.
செரிமான பிரச்சினையை போக்குவதுடன் இதில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம் இவைகள் எலும்பிற்கு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதுடன், இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் பிரச்சினையையும் சரி செய்கின்றது.
மேலும் கற்பூர வல்லி பழம் சாப்பிடுவதால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். கவனச்சிதறல், தூக்கமின்மை பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
எனவே தினமும் காலை உணவுடன் கற்பூரவள்ளி பழத்தை சாப்பிடுவதால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க தேவையான ஆற்றல் கிடைப்பதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |