அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! வாகனத்தின் டயர் எதனால் வெடிக்கின்றன?
பொதுவாகவே சாலை விபத்துக்கள் பற்றி அடிக்கடி செய்திகளில் கேள்விப்படுவது வழக்கம்.
இத்தகைய சாலை விபத்துகளுக்கு அதிவேகம் , கவனக்குறைவு, போதையில் வாகனம் செலுத்துவது போன்ற விடயங்களை தாண்டி ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்றால், அது கார் டயர்கள் வெடிப்பது தான்.
விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள், சாதாரண வாகனங்கள் என்ற வேறுபாடுகள் இன்றி சாலைகளில் இடம்பெரும் பெரும்பாலான விபத்துக்களில் வாகனங்களின் டயர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால் டயர்கள் வெப்பதற்கான காரணம் பற்றி நம்மில் 99 சதவீதம் மக்களுக்கு தெரியாது. எந்த வாகனமாக இருந்தாலும் அதனை சாலையுடன் இணைப்பது அதன் டயர்கள்தான்.
அவை வெடிப்பதற்கு முக்கியமான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உண்மையில் என்ஜினுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை டயருக்கும் கொடுக்க வேண்டியது அவசியம்.அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது மீள்பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
டயர் வெடிப்பதற்கான காரணங்கள்
டயர்களுக்கு காற்று நிரப்புவதில் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை அது நமது உயிர்பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
டயர்களில் காற்றழுத்தம் 30 முதல் 35PSI ஆக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அறியாமையின் காரணமாக PSI குறியீட்டு அளவை விட அதிகமான காற்றை டயர்களில் நிரப்புகிறார்கள். இவ்வாறு குறியீட்டு அளவைவிட அதிகமாக நிரப்புவது டயர்கள் வெடித்து விபத்து ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.
சரியான காற்றழுத்தம் என்பது வாகன தயாரிப்பு, மாடல் மற்றும் டயர்களின் அளவைப் பொறுத்து வேறுப்படுகின்றது. வாகனத்தின் Manualல் பரிந்துரைக்கப்பட்ட குறியீட்டு அளவை பின் பற்றுவதே பாதுகாப்புக்கான சிறந்த வழியாகும்.
டயர்கள் வெடிப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணம் வாகனத்தின் வேகம். உங்கள் வாகனம் காராகவோ, பைக்காகவோ இருக்கலாம். நிறுவனத்துடனும் தொடர்பு இல்லை.
நீங்கள் செல்லும் வேகத்தைப் பொறுத்து டயர் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. இந்த அழுத்தம் அதிகரித்தால் டயர் வெடிக்கும். எந்த டயர் எவ்வளவு அழுத்தத்தைத் தாங்கும் என்பதைத் தெரிந்து கொள்ள, அவற்றைத் தயாரித்த நிறுவனங்களே ஒரு குறியீட்டைக் வழங்குகின்றது.
உதாரணமாக 134/76 G 14 75 L போன்ற தொடர் எண் இருக்கும். இவற்றை நிறுவனங்கள் டயர்களில் தெரியும்படி அச்சிடுகின்றன. அந்தக் குறியீட்டின் முடிவில் ஒரு ஆங்கில எழுத்து டயர்களில் எவ்வளவு காற்று இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
அந்த எழுத்து L என்றால் அதிகபட்ச வேகம் 120 கி.மீ. M என்றால் 130 கி.மீ, N என்றால் 140 கி.மீ., P என்றால் 150 கி.மீ., Q என்றால் 160 கி.மீ., R என்றால் 170 கி.மீ., S என்றால் 180 கி.மீ., T என்றால் 190 கி.மீ., U என்றால் 200 கி.மீ., H என்றால் 210 கி.மீ., V என்றால் 240 கி.மீ., W என்றால் 270 கி.மீ., Y என்றால் 300 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும்.
இந்த வேகத்தை மீறி வானனத்தை ஓட்டினால் டயர்கள் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
