வயதை குறைத்து காட்டும் வைட்டமின்.. இனியும் தெரியாமல் இருந்தால் ஆபத்து!
பொதுவாகவே இந்த உலகில் இளமையை விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.
வாழ்நாள் முழுவதும் இளமையாகவே இருக்க வேண்டும் என்ற ஆசையில் பல வழிகளில் முயற்சி எடுத்துக் கொள்வார்கள். ஆனாலும் 40 வயதை நெருங்கி விட்டால் முதுமை தோற்றம் வர ஆரம்பித்து விடும்.
வயது மூப்பை நினைத்து வருத்தம் கொள்ளாமல் அதற்கு என்னென்ன உணவு பழக்கங்களை செய்துக் கொள்ளலாம் என சிந்திப்பதே சிறந்தது. இதன்படி, முதுமை தோற்றம் வைட்டமின் குறைபாடுகள் காரணமாக ஏற்படுகிறது.
40 வயதை தாண்டியவர்களுக்கு மன அழுத்தம், குடும்ப பிரச்சினை, வேலையில் பிரச்சினை ஆகிய பிரச்சினைகள் அதிகம் இருக்கும். இதனால் அவர்கள் தங்களின் உடல்நலம் குறித்து பெரிதாக கவலைக் கொள்ளமாட்டார்கள்.
அந்த வகையில், 40 வயதை தாண்டியவர்கள் தங்களின் இளமையை எப்படி தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

வைட்டமின் பி12
மற்ற வைட்டமின்களை விட பி12 வைட்டமின் ரொம்பவே முக்கியமானது. ரத்த அணுக்களின் ஆரோக்கியத்தை இது பாதுகாக்கிறது. அனைத்து உடல் உறுப்புக்களும் சீராக இயங்க வேண்டும் என்றால் இந்த வைட்டமின் உள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். வைட்டமின் பி12 இறைச்சி உணவுகள், பால், முட்டை ஆகியவற்றில் உள்ளது.

வைட்டமின் C
உடலில் உள்ள செல்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இந்த வைட்டமின் செய்கிறது. கொலாஜன் என்ற புரதத்தை இந்த வைட்டமின் அதிகமாக உற்பத்தி செய்து சருமத்திற்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
இந்த வைட்டமின் ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, ஸ்ட்ராபெரி, தக்காளி, திராட்சை உள்ளிட்ட பழங்கள் மற்றும் பாலக்கீரையில் உள்ளது. நாளாந்த உணவுடன் இந்த வகைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வைட்டமின் D
இயற்கையான சூரிய ஒளியில் இந்த ஊட்டச்சத்து கிடைக்கிறது. காலை வேலையை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு வைட்டமின் D இயற்கையாகவே கிடைத்து விடும். இந்த வைட்டமின் சரியாக கிடைத்து விட்டால் மூட்டு வலி, தோள்பட்டை வலி என எலும்பு தொடர்பான பிரச்னைகள் வருவது குறைந்து விடும். அப்படி பெறாதவர்கள் முட்டை,மீன், காளான்கள் உள்ளிட்ட உணவுகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |