உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ அல்சர் பிரச்சனையா இருக்கலாம்
அல்சர் பிரச்சனை வந்தால் என்ன அறிகுறிகள் வரும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
அல்சர் பிரச்சினை
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் சரியான நேரத்தில் உணவுகள் எடுத்துக் கொள்ளாமலும், சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் வயிற்றுப்புண்ணால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆரம்ப காலத்திலேயே அல்சர் பிரச்சினைக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், அதிகமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அந்த வகையில் அல்சர் வயிற்று புண்இருந்தால் தோன்றும் அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அறிகுறிகள் என்ன
முதலில் அல்சர் பிரச்சனை இருந்தால் வரக்கூடிய அறிகுறி வயிறு எரிச்சல். பொதுவாக சாப்பிட்ட பின்போ அல்லது வெறும் வயிற்றில் இருக்கும் போதோ தாங்கமுடியாத அளவு வயிறு வலி வந்தால் அது அல்சராக இருக்கலாம்.
உங்களுக்கு தொடர்ச்சியாக புளித்த ஏப்பம், அல்லது வாய்வு பிரச்சனை ஏற்பட்டால் அது அல்சர் பிரச்சனைக்குரிய இருக்கலாம். இதனால் உங்களுக்கு குமட்டல் அல்லது வாந்தி போன்ற பிரச்சைனைகளை ஏற்படுத்தும்.

உங்களுக்கு பசிக்காமல் இருந்தால் அல்லது கம்மியாக சாப்பிட்ட போதிலும் நிறைய சாப்பிட்டது போன்று உணர்ந்தாலோ அல்லது எடை குறைந்தது போன்று இருந்தாலோ மருத்துவரை அனுக வேண்டும்.
மலம் கழிக்கும் போது அதன் நிறம் கருப்பாக இருந்தாலோ அல்லது ரத்தம் வந்தாலோ மருத்துவரை அனுக வேண்டும். ஏனென்றால் இது அல்சரின் தன்மை அதிகமானதுக்கான அறிகுறி.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |