இந்த 7 பண்புகள் இருந்தால் நீங்க வசீகரிக்கும் ஆளாக மாறிடுவீங்க... என்னென்ன தெரியுமா?
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் மற்றவர்கள் தங்களை விரும்ப வேண்டும் என்றும் தங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் ஆசை இருக்கும்.
நமது வெளித்தோற்றம் வசீகரமான இருந்தால் தான் மற்றவர்களால் அதிகம் ஈரக்கப்படுவோம் என்ற கருத்து பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
இது ஓரளவுக்கு உண்மை என்றாலும், நமது வசீகரத்தன்மையை வெளிபுற அழகு மட்டுமே தீர்மாணிக்கின்றது என சொல்லிவிட முடியாது.
நாம் ஒரு சில நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளுவதன் மூலமும் நமது வசீகரத்தன்மையை அதிகரிக்க முடியும்.
அப்படி மற்றவர்கள் மத்தியில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயர வேண்டும் என்றால், உங்களிடம் இருக்க வேண்டிய அல்லது நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள் என்னென்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மற்றவர்களை ஈர்க்கும் குணங்கள்
ஒருவரின் வெளித்தோற்றம் எவ்வளவு அழகாக இருந்தாலும், அவர்களிடம் பணிவு இல்லை என்றால் அவர்களின் மொத்த அழகையும் கெடுத்துவிடும்.
அவ்வளவு உயர்ந்த பதிவியில் இருந்தாலும் தலைகணம் இல்லாத குணம் மற்றவர்களை வசீகரிக்கும் தாரக மந்திரம் என்றால் மிகையாகாது.
மற்றவர்களுடன் கதைக்கும் போது அது ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருச்தாலும் சரி அவர்களின் கண்களை பார்த்து கதைக்கும் குணம் இருந்தால் நீ்ங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். காரணம் நேர்மையானவர்கள் மட்டுமே மற்றவர்களின் கண்களை பார்த்து கதைப்பார்கள்.
மற்றவர்களை ஈர்க்க வேண்டும் என்றால் உங்களின் நகைச்சுவை ஆற்றலை நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். எப்போதும் மனிதர்கள் சிரிக்க வைக்கும் நபர்களை தான் அதிகம் விரும்புகின்றார்கள்.
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் குணம் பெரும்பாலான மனிதர்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் சில சமயம் வார்த்தைகள் விஷம் போல் கொடியதாக இருக்கும்.
மற்றவர்களை வசீகரிக்க வேண்டும் என்றால் எப்போதும் வார்த்தைகளை அழகாக பயன்படுத்த பழகுங்கள். இந்த குணம் உங்களிடம் இருந்தால் உங்களை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
நீங்கள் இலக்கை அடைவதில் குறியாக இருக்கும் குணம் கொண்டவர் என்றால், அனைவருக்கும் உங்கள் மீது தனி மரியாதை ஏற்படும். உங்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள்.
ஒருவர் பொய்யாக நடிக்கிறார் என்றால் அவரிடம் பிறருக்கு ஏற்படும் ஈர்ப்பு உடனே இல்லாமல் போய்விடும்.
ஆனால் உண்மையை நேர்மையாக சொல்லும் குணம் உங்களிடம் இருந்தால் யாராலும் உங்களை மனதார வெறுக்கவே முடியாது. நேர்மையின் அழகே தனித்துவமானது. இந்த குணங்கள் எல்லாம் உங்களிடம் இருந்தால் உங்களைவிட அழகானவர்கள் இருக்கவே முடியாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |