உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி!
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக செயற்பட வேண்டியது அவசியம். அப்போது தான் நாம் முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக அர்த்தம்.
அந்தவகையில் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் பிரதான தொழிலை சிறுநீரகம் செய்கின்றது.

குறிப்பாக நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரகங்கள் சரியாக இயங்காத போது, அது உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் கூட பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகளின் தொடர்ச்சியான பாவ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.
நிறுநீரகம் செயழிழக்க ஆரம்பிக்கும் போது உடலில் முன்கூட்டியே உடலில் சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.அது குறித்து அனைவருமே அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இவ்வாறான முக்கிய அறிகுறிகள் தொடர்பில் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய அறிகுறிகள்

முக வீக்கம் - சிறுநீரக பிரச்சனையின் முக்கிய அறிகுறியாக முகத்தில் ஏற்படும் வீக்கம் குறிப்பிடப்படுகின்றது. சிறுநீரகங்களால் சரியாக செயல்பட முடியவில்லை எனும் பட்சத்தில் தான் மிகுதியான சோடியம் மற்றும் நீரை வெளியேற்ற முடியாமல் போகும்.இந்நிலையில் உடலில் திரவங்கள் குவியத் தொடங்கும். இதை எடிமா என மருத்துவ துறையில் குறிப்பிடுவார்கள்.
இப்படியான வேளையில் இரவு தூங்கும் போது, அந்த திரவம் முகத்தில் குறிப்பாக கண்களைச் சுற்றி தேங்கி, தூங்கி எழும் போது முகத்தை வீங்கச் செய்து காட்டுகிறது. எனவே திடீரென்று தூங்கி எழும் போது முகம் வீங்கினால் அதனை அலட்சயப்படுத்தாமல் முறையாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

குமட்டல் - சிறுநீரக செயலிழப்பானது உடலில் யூரியா போன்ற நச்சுக்களின் அளவை அதிகரித்து விடும். இந்நிலையை யூரிமியா என்று அழைப்பர். இந்த யூரியாவானது செரிமான மண்டலத்தில் நுழையும் போது, அது குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். குறிப்பாக காலையில் எழுந்ததும் குமட்டல் பிரச்சினை இருந்தால் அது சிறுநீரக பாதிப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். எனவே மருத்துவரிடம் இது குறித்து விளக்கம் கேட்க வேண்டியது அவசியம்.

சிறுநீரில் மாற்றம் - சிறுநீரகங்களில் பாதிப்பு இருக்கின்றா என்பதை காலையில் எழுந்ததும் கழிக்கும் சிறுநீரைக் கொண்டே சொல்லிவிடலாம். சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், அது சிறுநீரில் நிச்சயம் மாற்றத்தை உண்டாக்கும். குறிப்பாக நுரையுடன் சிறுநீரை கழித்தால், அது புரோட்டீன் கசிவின் அறிகுறி. அதுவும் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்திலோ அல்லது இரத்தம் கலந்து வெளிவந்தாலோ, சிறுநீரகங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படிப்பதன் அறிகுறியாகும்.

கீழ் முதுகு வலி - சில நேரங்களில் சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், அது கீழ் முதுகு வலியை உண்டாகலாம் உன மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இந்த வலியை அதிகாலையில் அடிக்கடி அனுபவிக்கின்றீர்கள் என்றால் அவசியம் மருத்துவரிடம் முறையாக சிகிச்சை பெற வேண்டியது.

சரும வறட்சி - சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் சருமத்தில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக சருமத்தில் காரணமின்றி அரிப்பு ஏற்பட்டாலோ வழக்கத்திற்கு மாறாக சருமம் அதிகமாக வறட்சி அடைந்தாலோ சிறுநீரகங்களில் தீவிர பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |