தர்பூசணி சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிடக்கூடாது? சாப்பிட சரியான வழி என்ன?
மீபத்தில் மும்பையில் தர்பூசணி சாப்பிட்டதால் ஏற்பட்ட மரணங்களைத் தொடர்ந்து, மக்கள் தர்பூசணி சாப்பிடுவதற்கு அதிகளவில் அச்சப்படுகிறார்கள்.

தர்பூசணி
கோடை காலத்தில், மக்கள் தங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிடுகிறார்கள்.
தர்பூசணி நீரேற்றத்திற்கு ஒரு சிறந்த பழமாகும். ஆனால் ஆயுர்வேதத்தின்படி, தர்பூசணியை சில உணவுகளுடன் சேர்த்து உண்பது மிகவும் ஆபத்தானது.
தவறான உணவு சேர்க்கைகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். சில நேரங்களில், இந்த உணவு சேர்க்கைகள் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் செரிமான அமைப்புக்கு ஆபத்தானவையாக இருக்கலாம்.
தர்பூசணி சாப்பிட்ட பின்னர் என்ன சாப்பிடக்கூடாது அதை எப்படி என்ன நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தர்பூசணியுடன் எவற்றைச் சாப்பிடக்கூடாது?
தர்பூசணி சாப்பிடும்போது பால் பொருட்களை சாப்பிட கூடாது. தர்பூசணி சாப்பிட்ட உடனேயே பால், தயிர் அல்லது சீஸ் ஆகியவற்றைத் சாப்பிடுவது உடலில் பல ஆபத்துக்களை கொண்டு வரும்.
தர்பூசணியில் உள்ள அமிலம் பாலுடன் கலந்து வயிற்றில் ஒவ்வாமையை உருவாக்கும். இது கடுமையான நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

நறுக்கிய தர்பூசணியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா?
தர்பூசணி ஒரு பெரிய பழம். மக்கள் பெரும்பாலும் பாதியாக வெட்டப்பட்ட தர்பூசணியைச் சாப்பிட்டுவிட்டு, அதை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கிறார்கள். இப்படி செய்வது மிகவும் ஆபத்தான விடயமாகும்.
தர்பூசணியை வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைப்பது தொற்று நோயை நாம் பாசமாக அழைப்பது போன்றது. வெட்டப்பட்ட தண்ணிப்பழத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இவை பாக்டீரியாக்களை வேகமாக உறிஞ்சிக்கொள்வதால், உணவு நஞ்சாதல் மற்றும் டைபாய்டு காய்ச்சல் ஏற்படும் அபாயம் 200% அதிகரிக்கிறது.

தர்பூசணி சாப்பிட சரியான வழி எது?
- வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிட கூடாது. இதை ஏதாவது உணவு சாப்பிட பின்னர் சாப்பிடுவது நல்லது.
- ஒரு நாளைக்கு ஒரு துண்டு தர்பூசணி சாப்பிடலாம். அதிகமாக சாப்பிடுவது ஆபத்தை தரும்.
- குறிப்பாக உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
- இது இரத்தச் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்யலாம். எனவே காலை உணவுக்குப் பிறகு தர்பூசணி சாப்பிடுவது சிறந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |