செய்வினை கோளாறை ஓட ஓட விரட்டும் விஷேச வழிபாடு.. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நம்முடைய மூதாதையர்களில் யாராவது கன்னியாக இறந்தால் அவர்களை கொண்டு செய்யப்படும் வழிபாடு கன்னி வழிபாடு என அழைக்கப்படுகின்றது.
இந்த வழிபாட்டினால் நோய் நொடிகள் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிடைக்கும். வீட்டில் துர்மரணங்கள் நேராது.
எல்லாவற்றிற்கும் மேலாக வாரிசுகளின் வாழ்க்கையானது வெகு சிறப்பாக அமையும். ஆகிய நல்லவை நடக்கும். இது போன்ற ஏராளமான நன்மைகள் எம்மை சேர்க்கின்றது என மூதாதையர்கள் கூறுகின்றார்கள்.
வீட்டில் அடிக்கடி பிரச்சினை, எது செய்தாலும் தடங்கல், பணக்கஷ்டம் இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் இது போன்ற பழமையான வழிபாடுகளில் ஈடுபடலாம். இவைகள் உடனடி தீர்வு தரும் என முதியர்கள் நம்புகிறார்கள்.
அந்த வகையில் கன்னி வழிபாட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.
வழிபாட்டின் நன்மைகள்
1. குடும்பம் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.
2. தொலை தூரம் சென்ற உறவுகள் இந்த வழிபாட்டினால் மீண்டும் உங்களை தேடி வருவார்கள்.
3. பெண்ணுக்கு எப்போதும் பிறந்த வீட்டின் மீது பற்று உண்டு. இதனை அடிப்படையாக கொண்டு தான் இந்த வழிபாடு செய்யப்படுகின்றது.
4. செய்வினை கோளாறு நீங்கி விடும். 5. பேய் பிசாசு அண்டாது.
கன்னி வழிபாடு செய்ய என்ன காரணம்?
கன்னியாக இருப்பவர்கள் தங்களின் பிறந்த வீட்டின் மீது அதிகமான பற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள். அண்ணன்- தம்பி என குடும்பமாக இருப்பதற்கே அவர்கள் விரும்புவார்கள். இதனை அடிப்படையாக கொண்டு தான் இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.
குடும்பமாக சேர்ந்து இந்த வழிபாட்டை மேற்க் கொள்ளும் போது கன்னியின் மனம் குளிர்ந்து வரம் கொடுப்பார் என மூதாதையர்கள் நம்புகிறார்கள்.
வெளியிடங்களில் வசிப்பவர்கள் குடும்ப நன்மைக்காக குடும்பத்தினருடன் இணைந்து இந்த வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |