கருஞ்சீரகம் புற்றுநோய்க்கு தீ்ர்வு கொடுக்குமா? சாதத்துடன் இப்படி சாப்பிட்டாலே போதும்
பொதுவாகவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினசரி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் முறையான உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியதும் அவசியமாகின்றது.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்த வேலைப்பளு, அதிக நேரம் அமர்ந்து வேலை பார்ப்பது, துரித உணவுகளின் பெருக்கம், சூழல் மாசு போன்ற பல்வேறு காரணங்களினால் புற்றுநோய், நீதிரிழிவு, மாரடைப்பு போன்ற உயிர்கொல்லி நோய்களின் தாக்கமும் அதிகதித்து வருகின்றது.
அந்த வகையில் இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடிய கருஞ்சீரகத்தின் நன்மைகள் குறித்தும் உயிர் கொல்லி நேயான புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு பெற இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
புற்றுநோய்க்கு தீ்ர்வு கொடுக்குமா?
வேறு எந்த தாவரத்திலும் இல்லாத தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் கருஞ்சீரகத்தில் காணப்படுகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.
இதில் உடல் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. சுவாசப்பிரச்சனைகள், இதயநோய், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கருஞ்சீரகத்தில் நிறைந்து காணப்படுகின்றது.
தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்ற பெரிதும் துணைப்புரியும்.
பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை வெளியேற்ற ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட வேண்டும். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டால் அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.
கருஞ்சீரகத்தை தொடர்ந்து உணவில் சேர்த்துக் செய்து கொள்வதால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும். மேலும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் இது உதவுகின்றது.
சாதம் சமைக்கும் போது சிறிதளவு கருஞ்சீரகத்தை ஒரு துணியில் கட்டி சாதத்ததுடன் சேர்த்து வேக வைத்து அதன் சாறு சாதத்துடன் கலந்ததும் பின்னர் இதனை நீக்கிவிட வேண்டும். இவ்வாறு செய்வது உடலில் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |