உங்கள் துணை இதையெல்லாம் செய்கிறாரா? அப்போ ஏமாற்றுகின்றார் என்பது உறுதி
பொதுவாக அனைவருமே தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான்.
ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது. மனதுக்கு பிடித்தவரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமான விடயம் கிடையாது ஆனால் அது ஒரு போதும் அதிகாரத்தால் முடியாத காரியம் தான். இதற்கு முதலில் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் அற்ற தூய்மையான அன்பு முக்கியம்.
தங்களின் விருப்பத்துக்குரியவர்க்ள சண்டை போடுவதை கூட சகித்து கொண்டு வாழலாம் ஆனால் அவர்கள் ஏமாற்றுவதை உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது.
உங்கள் துணை உங்களை ஏமாற்றுகின்றார் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் துணை திடீரென பிசியாக இருப்பதாக கூறி அடிக்கடி உங்களிடம் பேசுவதை புறகக்கணிக்கின்றார் என்றால் அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
அவர் உங்களுக்காக செலவிடும் நேரத்தை வேறு யாருடனோ செலவிடுகின்றார் அல்லது உங்கள் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கின்றார் என்பதே இதன் பொருள்.
உங்கள் விருப்பத்துக்குரியவர் இருக்கும் இடத்தை சொல்ல தயங்கினாலோ அல்லது மறுத்தாலோ அவர் உங்களுக்கு உண்மையாக இல்லை. அவர் உங்களுடன் பகிரமுடியாத விடயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார் என்பதாக அர்த்தம்.
உங்கள் அன்புக்குரியவர் உங்களிடம் காட்டும் அக்கறையும் அன்பும் திடீரென குறைவது மற்றும் உங்களை பற்றி அவர் பல விடயங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வம் இல்லாமல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்கள் துணை ஏமாற்றுகிறார்.
அவரின் வாட்ஸ் அப் மற்றும் அழைப்புகளை உங்கள் துணை மறைத்தால் அவர் உங்களிடம் இருந்து எதையோ மறைக்க முயற்சிக்கின்றார் அல்லது வேறு உறவில் ஈடுபாடு காட்டுகின்றார் என அர்த்தம்.
உங்கள் துணை உங்கள் முன்னிலையில் தொலைபேசியில் பேசுவதை தவிர்ப்பது மற்றும் செல்போனை உங்கள் முன்னிலையில் வைக்காது பாதுகாப்பது போன்ற விடங்கள் அவர் உங்களை ஏமாற்றுகின்றார் என்பதையே குறிக்கின்றது.
எல்லா விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் உங்கள் துணை திடீரென உங்களிடம் எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் இவர் உங்களிடமிருந்து விலக முயற்சிக்கின்றார் என புரிந்துக்கொள்ளுங்கள்.
உளவியவின் அடிப்படையில் உங்கள் துணை உங்கள் கண்களை பார்த்து பேசுவதை குறைப்பதும் நீங்கள் எதை பற்றி கேட்டாலும் சண்டையிடுவதும் கூட அவர் உங்களை ஏமாற்றுவதையே குறிக்கின்றது.
நீங்கள் விரும்பும் நபர் எந்த காரணமும் இல்லாமல் உங்களிடம் அடிக்கடி கோபமாக பேசுகின்றார் என்றால் உரையாடல்களைத் தவிர்ப்பதற்கான முயற்சியாகவும் வேறு உறவில் இருப்பதை மறைமுகமாக உணர்த்துவதாகவுமே பார்க்கப்படுகின்றது.
மனித வாழ்வில் சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்ளவும் நம்மை கவனித்துக்கொள்ளவும் அக்கறையுள்ள ஒரு வாழ்க்கைதுணை அனைவருக்கும் நிச்சயம் தேவை தான்.
அதற்காக புறக்கணிக்கும் துணையுடனும் உங்களை ஏமாற்றும் துணையுடனும் வாழ்ந்து வாழ்வை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறான அறிகுறிகளை உணர்ந்தால் அவர்களை நீங்களும் தவிர்த்துவிடுவதே சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |