இதய ஆரோக்கியதை பாதுகாக்கணுமா? அப்போ இந்த காயை தவிர்க்காதீர்கள்
பொதுவாகவே உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். என்றால் ஊட்டசத்து நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் எப்போதும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவே அமையும். அந்த வகையில் முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இருப்பினும் இந்த முள்ளங்கியை பலரும் விரும்புவதில்லை.
பெரும்பாலானவர்கள் ஒதுக்கிவைக்கும் இந்த முள்ளங்கியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்
முள்ளங்கியில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன.
முள்ளங்கினை உண்ணும்போது அவை குறைந்த அளவு எரிசக்தியுடன் நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பிய உணர்வினை கொடுக்கின்றது.
இதில் அதிகளவில் நார்ச்சத்து காணப்படுவதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு முள்ளங்கி சிறந்த தெரிவு.
முள்ளங்கியானது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சினை நீக்க உதவுகிறது. முள்ளங்கியானது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவினை அதிகரித்து இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.
தினசரி உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் சி அளவில் 155 சதவிகிதத்தினை வெறும் அரை கப் முள்ளங்கி நிறைவு செய்கின்றது.
முள்ளங்கியில் அதிகளவு வைட்டமின் சி காணப்படுவதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி நமக்கு வரக்கூடிய சளி, இருமல் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கின்றது.
முள்ளங்கியியை அதிகளவில் சாப்பிடுவதால் சருமத்தில் கொலாஜன் உற்ப்பத்தி அதிகரிக்கப்படுகின்றது. இதனால் சருமம் எப்போதும் இளமையாகவும் பொலிவாகவும் இருக்கும்.
முள்ளங்கியில் குறைவான கலோரிகளே இருப்பதால், உடல் எடை குறைக்க பெரிதும் துணைப்புரிவதுடன் இதில் காணப்படும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கின்றது.
மேலும் செரிமானத்திற்கு முக்கியமானதாக இருக்கும் பித்த உற்பத்தியை அதிகரித்து செரிமான கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கும்.
முள்ளங்கியில் அந்தோசைனின் எனும் வேதிப்பொருள் மற்றும் பிற கலவைகளானது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மேலும் ஆரோக்கியமான சருமம் மற்றும் கண்களுக்கும் முள்ளங்கியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |