மாதுளை டீ குடித்தால் இவ்வுளவு நன்மைகளா? பலரும் அறியாத உண்மை
மாதுளை டீ குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
மாதுளை
மாதுளை பழத்தில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்ற சத்துக்கள் உள்ள நிலையில், நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, வீக்கத்தை குறைத்து இதய நலனை பாதுகாக்கிறது.
விலை சற்று அதிகமாக காணப்பட்டாலும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. இதுவரை மாதுளையை பழமாக தான் நாம் சாப்பிட்டு பழகியிருப்போம்.
ஆனால் ஒருமுறை மாதுளையை டீ-யாக பருகி பார்த்தால் எண்ணற்ற நன்மையினை நாம் பெற முடியும். அந்த நன்மைகளை கீழே தெரிந்து கொள்வோம்.

பயன்கள் என்ன?
மாதுளை பழத்தில் உள்ள சத்துக்கள் டீ-யிலும் நிறைந்துள்ளது. இதில் பாலிஃபீனால்கள் நிறைய உள்ளதால் உடலில் அங்காங்கே இருக்கும் வீக்கத்தை குறைக்கவும், நீண்ட நாட்களாக இருக்கும், கை கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் குணமடைகின்றது.
மேலும் செரிமானம் மேம்படுவதுடன், உடம்பில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது. பொதுவாக உணவு சாப்பிட்டதும் டீ குடித்தால் செரிமானம் ஆகும் என்று நம்மில் பெரும்பாலான நபர்கள் நினைப்பதுண்டு.

அதுவே பால் டீ பருகாமல் மாதுளை டீ பருகினால் மிகவும் சிறந்ததாகவும், உணவு சாப்பிட்ட பின்பு சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.
அதுமட்டுமின்றி மாதுளை டீ பருகினால் சருமம் பொலிவாக இருப்பதுடன், வயதாகும் தோற்றத்தினையும் குறைக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |