இந்த பொடியை கறிவேப்பிலையுடன் கலந்து தடவுங்க! நரைமுடி கருப்பாக மாறும்
எந்தவித இரசாயனங்களும் இல்லாமல் தங்கள் நரை முடியைக் கருமையாக்க விரும்புவோருக்கு, கறிவேப்பிலை ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்.

நரைமுடி பிரச்சனை
கறிவேப்பிலை, கூந்தல் பராமரிப்பிற்கான ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகக் கருதப்படுகிறது.
கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், முடியை இயற்கையாகவே கருமையாக்கவும் பளபளப்பாக்கவும் மாற்றும் ஒரு இயற்கை பொருள்.
எனவே வெந்தய விதைகளை கறிவேப்பிலையுடன் சேர்த்துப் பயன்படுத்துவது நரை முடியை இயற்கையாகவே கருமையாக்கி, நீண்ட, பளபளப்பான கூந்தலைப் பெற உதவுகிறது எனப்படுகின்றது.

வீட்டு வைத்தியம்
இந்த வீட்டு வைத்தியத்தைத் தயாரிக்க வேண்டும் என்றால் முதலில் ஒரு பத்திரத்தில் புதிய கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தைப் போட்டு, அவை கருப்பாக மாறும் வரை குறைந்த தீயில் நன்றாக வதக்கவும்.
கறுப்பு நிறம் வரும் வரை வறுத்த கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தை, நன்றாகப் பொடியாக அரைக்கவும்.

கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தை அரைத்த பொடியை கற்றாழை ஜெல்லுடன் கலந்து உங்கள் தலைமுடியில் தடவினால், உங்கள் நரை முடி கருப்பாக மாறும்.
இரசாயனம் போல இயற்கை வீட்டு வைத்தியம் அப்போதே பலன் தராது. இயற்கையான வீட்டு வைத்தியம் நமக்கு பயன் தர சில நாட்களோ மாதங்களோ ஆகும். இந்த வீட்டு வைத்தியத்தை நீங்கள் வாரத்திற்கு 4 தடவை செய்தால் காலப்போக்கில் நரை முடி கருப்பாக மாபறும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |