மாதுளை டீ குடித்தால் இவ்வுளவு நன்மைகளா?
மாதுளை டீ குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மாதுளை
மாதுளை பழத்தில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை உள்ள நிலையில் இவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு வீக்கத்தை குறைத்து இதய நலனை பாதுகாக்கிறது.
மாதுளை பழத்தில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை உள்ள நிலையில் இவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு வீக்கத்தை குறைத்து இதய நலனை பாதுகாக்கிறது.
இந்த நிலையில் மாதுளை டீ குடித்தால் என்ன பலன் என்று இங்கு கீழே காணலாம்.

என்ன பலன்
மாதுளையில் அதிக சத்துக்கள் உள்ளது. மாதுளை டீயில் நிறைய உள்ளது. இதில் பாலிஃபீனால்கள் நிறைய உள்ளதால் இது நம் உடலில் அங்காங்கே இருக்கும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. அது மட்டுமின்றி நீண்ட நாட்களாக மூட்டு வலி, கை கால் வலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த டீ குடித்தால் வலி குறையும்.
மாதுளை டீ குடிப்பதன் மூலம் உங்கள் செரிமானம் மேம்படும் அது மட்டுமின்றி இது உங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பொதுவாக உணவு சாப்பிட்ட பின் டீ குடித்தால் தான் செரிமானம் ஆகும் என்பவர்கள் பால் டீ குடிக்காமல் இந்த டீ குடிப்பது நல்லது. அது மட்டுமின்றி இது நாம் உணவு உண்ட பின் நம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.

இவை அனைத்தையும் விட மாதுளை டீ குடிப்பதன் மூலம் நம் சருமம் பொலிவாக இருக்க உதவுகிறது. ஏனென்றால் இதில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், டானின்களும் உள்ளது. இதனால் இது நம் சருமம் பொலிவாக வைக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |