சோம்பேறித்தனத்தை விரட்டணுமா? இந்த எளிய விடயங்களை செய்தாலே போதும்
வாழ்வில் வெற்றியடைய பெரிய தடையாக இருப்பதே இந்த சோம்பேறித்தனம் தான். இச்த குணட் இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என வாழ்வியல் ரீதியாக கூறப்படுகிறது.
வாழ்க்கையில் ஒரே படியில் நிற்காமல் அடுத்தபடியை நோக்கி செல்வதில் தான் வெற்றி இருக்கின்றது.
அதற்கு தடையாக இருக்கும் சோம்பேறித்தை உடைத்தெரிந்தால் மட்டுமே நம்மால் வாழ்வில் வெற்றியின் அலாதியான இன்பத்தை அனுபவிக்க முடியும்.
அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வு எடுக்கலாம். ஆனால் எந்த ஒரு வேலையுமே செய்யாமல் ஒரு சிலர் ஓய்வு எடுப்பார்கள் அதுதான் சோம்பேறித்தனம்.
இந்த குணத்தை யாரும் விரும்பி ஏற்றுக்கொள்வது கிடையாது. இருப்பினும் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைத்ததாலும் முடியவில்லை என கூறுபவர்கள் தான் அதிகம்.
நமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சோம்பேறித்தனத்தை எளிமையாக வாழ்வில் இருந்து அகற்றுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய வழிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
சோம்பேறித்தனம் நீங்க...
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்று சில ஆரோக்கியமான பழக்கங்களை தொடர்ந்து செய்வதற்கு உங்களை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த பழக்கங்கள் சோம்பேறித்தனத்தை விரைவில் இல்லாமல் ஆக்குவதற்கு உதவும்.
ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்றால், அதனை உடனடியாக செய்து முடிக்க உங்களை பழக்கப்படுத்த வேண்டும் வேலைகளை தள்ளிபோடும் குணம் இருப்பது தான் சோம்பேறித்தனத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
நீங்கள் வேலை செய்யும் அல்லது தினமும் இருக்கும் இடத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதால், உங்களின் அன்றாட வேலைகளை புத்துணர்வுடன் செய்ய முடியும்.
குறிப்பாக இயற்கை சார்ந்த பொருட்களை அருகில் வைத்துக்கொள்வது வேலையில் ஏற்படும் சலிப்புத்தன்மையை போக்கி சோம்பேறித்தனத்தை இல்லாமலாக்க பெரிதும் துணைப்புரியும்.
எந்த வேலையில் ஈடுப்படடாலும் 25 நிமிடங்களுக்கு கனத்தை சிதறவிடாமல் இருப்பதற்கு செய்வதற்கு பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் 5 நிமிடம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் வேலையில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு 25 நிமிடத்துக்கு ஒரு முறை 5 நிமிடம் ஓய்வெடுப்பதால் சாதாரணமான செய்வதை விட அதிகமான வேலைகளை கவனத்துடன் உட்சாகமாக செய்து முடிக்க முடியும்.
எப்போதும் அமர்ந்தே இருக்காமல், அடிக்கடி சிறிது நேரம் எழுந்து நடப்பது சோம்பேறித்தனத்தில் இருந்து விடுபட உதவும்.
அனைத்து வேலைகளையும் சியாக செய்து முடிக்கும் ஒவ்வொரு முறையும், உங்களுக்கு நீங்களே நல்ல பாராட்டை பரிசாக கொடுத்துகொள்ளவது சோம்பேறித்தனத்தை விரட்ட சிறந்த வழியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |