ஸ்மார்ட் போன்களில் சிறிய துளைகள் ஏன் இருக்கிறது தெரியுமா?அவசியம் தெரிஞ்சுக்கோங்க
இப்போதெல்லாம் கையில் போன் இல்லாதவர்களை பார்ப்பதே கடினம். குறிப்பாக ஸ்மார்ட்போன் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழ்கிறது.
சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் விலை வரையிலான செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப அதன் சிறப்பம்சங்களும் இருக்கின்றன.
செல்போனில் இருக்கும் சிறப்பம்சங்களை நாம் அது தொடர்பான வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்வோம். ஆனால் நம் செல்போனில் வெளிப்பகுதி பற்றி நமக்குபெரியளவில் தெரியாது.
இதில் ஒரு விஷயமாகத்தான் போன்களில் சிறியதுளைகள் ஏன் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்மாட்போன்கள்
ஆன்ராயிட்டு போனில் மேலும் கீழும் சிறிய துளைகள் இருக்கும். இதை நீங்கள் பெரிதாக கவனித்து இருக்க மாட்டீர்கள்.
அதில் கீழே உள்ள துளைகள் வைக்கப்பட்டதற்கான காரணம் அது மைக்ரோபோனாகும். அதாவது நாம் யாரையாவது செல்போனில் அழைக்கும் போது, இந்த மைக்ரோஃபோன் இயக்கப்படும்.
இது ஸ்மாட்போனில் கீழ் பகுதியில் உள்ளதால் நமது குரலை தெளிவாக பதிவு செய்து அனுப்ப உதவுகிறது.
போன்களுக்கு மேலே உள்ள துளைகள் இருப்பதற்கான காரணம் நாம் போன் பேசும் போது நம்மை சுற்றி உள்ள இரைச்சல் சத்தம் கேட்காமல் இருப்பதற்காக தான் இந்த துளைகள் இருக்கின்றன.