நடந்தால் மட்டும் போதும்.... உடல் எடையை எளிதாக குறைக்கலாம்
இன்றைய தவறான உணவுப் பழக்கவழக்கத்தால் மனிதர்கள் அனைவரும் உடல் எடை எனும் ஒரு கொடிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டு இருக்கின்றனர். எடையை குறைக்க பல வகையான பயிற்சிகள் இருக்கின்றன.
நடைப்பயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சி செய்வது, உங்கள் உடலை சுறுசுறுப்பாகவும் மற்றும் உங்கள் எடையை நிர்வாகிக்கவும் உதவும்.
மேலும் உடல் பருமனாவதையும் தடுக்கும். நடைப்பயிற்சி இதயத்திற்கு மிகவும் நல்லது தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது இதய நோயின் அபாயத்தை குறைக்கும்.
நடைப்பயிற்சி செய்வதன் மூலம் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நடைப்பயிற்சி
1. உடற்பயிற்சி செய்தால் அதை விடாமல் தொடர்ந்து செய்தால் தான் அதற்குரிய பலன் சரியாக கிடைக்கும். இந்த உடற்பயிற்சியை சரியாக கடைபிடிக்க முடியாதவர்கள் நடைப்யிற்சியை தொடர்ந்து செய்து வரலாம்.
இதற்கு குறிப்பிட்ட நேரம் தேவையில்லை, உபகரணங்கள் தேவையில்லை நடைப்யிற்சிக்கு ஏற்ற வகையில் ஒரு காலணி மட்டும் இருந்தால் நடைப்பயிற்சி செய்யலாம்.
2. இது வயது எல்லை இல்லாமல் அனைவரும் செய்யலாம். உடல் பருமன் அதிகம் கொண்டவர்களுக்கு உடற்பயிற்சியில் சில பயிற்சிகளை செய்ய முடியாமல் இருக்கும்.
அனால் இவர்கள் நடைப்பயிற்சி செய்யலாம், இவ்வாறு செய்யவதால் உடலில் ஒரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை.
3.இந்த நடைப்பயிற்சியால் இதயத்துடிப்பு அதிகரித்து அது கலோரிகளை எரிக்க வழிவகுக்கிறது. இதனால் தினமும் நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை எளிதாக குறைந்து விடும்.
இந்த நடைப்பயிற்சி உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாது உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். தினமும் வாக்கிங் செய்பவர்களை பாருங்கள் அவர்கள் எந்தவித பதட்டமும் இல்லாமல் இருப்பார்கள்.
4. மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் நடைப்பயிற்சி செய்வதால் மூட்டுகளின் அசைவையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கீழ் வாதம் மூட்டுபிரச்சனை இருப்பவர்கள் நடைப்பயிற்சி செய்து வந்தால் அது மிகவும் நன்மை தரும்.