திமிங்கலத்தை வணங்கும் 300 ஆண்டு பழமையான கோவில்! தோன்றிய வரலாற்று காரணம்;
திமிங்கலத்தை 300 ஆண்டுகளாக வழிபடும் ஊர் மக்கள் வணங்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலம் தாலுகாவின் மகோட் டுங்ரி என்ற கிராமத்தில் திமிங்கல மீன் கோவில் ஒன்று உள்ளது.
இந்த கோவிலானது மத்ஸ்ய மாதாஜி கோவில் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவிலில் திமிங்கலம் வழிபடப்படுகிறது. இந்த கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பிரபு தண்டேல் என்பவர் வாழ்ந்துவந்தார்.
ஒரு நாள் இரவு, அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில், கடற்கரைக்கு வரும் ஒரு மீன் மிகப் பெரியதாக இருந்தது. பின்னர் அந்த மீன் தெய்வத்தின் வடிவத்தை எடுத்து கரையை நோக்கி வருகிறது.
ஆனால் தரையை வந்தவுடன் இறந்துவிடுகிறது. இந்த கனவு அவருக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்த கனவை குறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அவர்கள் கரைக்கு வந்த பின், கனவில் வந்ததுபோலவே உண்மையில் ஒரு மீன் இறந்துகிடந்துள்ளது. இதைக்கண்ட ஊர் மக்கள் திமிங்கலத்தை அம்மனின் அவதாரம் என கருதி பிரமாண்டமாக மீன் தெய்வ கோவிலை கட்ட முடிவெடுத்தனர்.
அதன்பின்னர் இறந்த திமிங்கலத்தின் எலும்புகளை மட்டுமே எடுத்து கோவில் கட்டி அங்கு வைத்துள்ளனர். மேலும், கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த மீன் பெரிய மதிப்பை கொடுக்கவில்லை என எந்த உதவியும் செய்யாமல் இருந்துள்ளனர்.
ஒரு நாள் கிராமத்தில் நோய் பரவியதை அடுத்து, தங்கள் நம்பிக்கையின்மையால் தான் நிகழ்ந்தது என கோவிலுக்கு சென்று மன்னிப்பு கோரியுள்ளனர். இதனால், நோய் முடிவுக்கு வந்துள்ளது.
இன்றும் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் முன், மீனவர்கள், மத்ஸ்ய மாதாஜி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டப்பிறகு தான் கடலுக்கு செல்கின்றனர்.
மேலும், ஆண்டுதோறும், நவராத்திரி அஷ்டமி அன்று இங்கு பிரமாண்டமான திருவிழா நடத்தப்படுகிறது. இது இந்தியாவின் திமிங்கல கோவில்.