இலங்கையில் நீலநிறத்தில் மாறிய கிணற்று நீர்... குழப்பத்தில் மக்கள்
இலங்கை மட்டக்களப்பில் கிணற்று நீர் நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நீல நிறத்தில் கிணற்று நீர்
மட்டக்களப்பு நகர் பொற் தொழிலாளார் வீதியிலுள்ள ஒரு வீட்டில் கிணற்றில் இருந்த நீர் திடீரென நீலமாக மாறியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று நடைபெற்ற நிலையில், வீட்டில் குடியிருப்பவர்கள் வழக்கமாக கிணற்று நீரை தொட்டியில் நிரப்புவதற்கு மோட்டர் பம்பினை இயக்கிய போது நீல நிறத்தில் தண்ணீர் வருவதைக் கண்டுள்ளனர்.

உடனடியாக குறித்த மின்மோட்டரை நிறுத்திய பின்பு வாளி ஒன்றினால் தண்ணீரை எடுத்து சோதனை செய்துள்ளனர். அப்பொழுதும் நீல நிறத்தில் தண்ணீர் மாறியுள்ளது. மேலும் கிணற்றிற்குள் பார்த்த போதும் நீல நிறத்தில் தண்ணீர் காணப்படுவதை அறிந்த உரிமையாளர், கிராம அதிகாரியிடம் தகவல் கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |