உடல் பருமனை குறைக்க வேண்டுமா ? இதோ தண்ணீர் பூரியை சேர்த்துக் கொள்ளுங்கள்
இன்று பெருமளவில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது உடற்பருமன், எடையை குறைப்பதற்காக பலரும் பலவித வழிகளை முயற்சித்து வருகின்றனர்.
டயட்டுகள், கடுமையான உடற்பயிற்சிகள் என முயற்சி செய்தாலும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் கவனம் இருக்க வேண்டும்.
இந்த பதிவில் உடல் எடையை குறைக்க முயலும் நபர்கள் மிகவும் ருசியான அதே சமயம் புரோட்டீன் சத்துக்களையும் வழங்கும் தண்ணீர் பூரி செய்வது எப்படி என பார்க்கலாம்.
செய்முறை
ஒரு கப் அளவுக்கு கோதுமை மா எடுத்துக் கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
மாவு பிசையும் பொழுது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும், நன்றாக பிசைந்தால் மட்டுமே நெகிழ்வு தன்மையுடன் இருக்கும், தயார் செய்த மாவை அப்படியே 20 நிமிடங்களுக்கு வைத்து விடும்.
முட்டை கிரேவி
பூரிக்கு உள்ளே மிக டேஸ்டியான முட்டை கிரேவி செய்வது பற்றி பார்க்கலாம்.
6 முட்டைகளை எடுத்து அவித்துக் கொள்ளவும், இதில் இரண்டு முட்டைகளை மட்டும் எடுத்து மஞ்சள் கருவுடன் சேர்த்து சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
மற்ற முட்டைகளை மஞ்சள் கரு இல்லாமல் வெட்டிக் கொள்ளலாம், இதனுடன் பூண்டு பற்கள் 6யை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய், அரை டீஸ்பூன் சீரகம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
இதனுடன் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும், இதனுடன் ஒரு தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
இதில் காரத்திற்கு ஏற்ற பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கிய பின்னர் முட்டைகளை சேர்த்து கிளறிவிடவும், அவ்வளவு தான் சுவையான முட்டை கிரேவி தயார்.
தண்ணீர் பூரி
ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடானதும் பூரிகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
முன்னும் பின்னும் பிரட்டி போட்டு பொரித்த பின்னர், தட்டில் எடுத்து வைத்து முட்டை கிரேவியுடன் ரோல் மாதிரி செய்து சாப்பிடலாம்.
சத்தான அதே சமயம் உடலுக்கு நன்மைகளை அள்ளித்தரும் காலை உணவாக இதை சாப்பிடலாம், சர்க்கரை நோயாளிகளும் எவ்வித பயமும் இன்றி இந்த உணவை எடுத்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |