அதிகரிக்கும் எடையை அதிரடியாய் குறைக்கும் அதிசய பானம்! வெறும் வயிற்றில் இனி குடிங்க
உடல் எடை அதிகரிப்பது மக்களுக்கு பொதுவான பிரச்சனையாகி வருகிறது.
அதிகரிக்கும் எடை சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களை கொண்டு வருகிறது.
உடல் பருமனால் சிரமப்படுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். உங்களால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாவிட்டால், சில எளிய இயற்கையான வழிகள் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
எடையை அதிரடியாய் குறைக்கும் சீரக நீர்
அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கும் சீரகத்தில் கால்சியம், இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
தினமும் சீரகத்தை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், உடலில் கொழுப்பு படியாமல், உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.

தயாரிப்பது எப்படி?
ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 டீஸ்பூன் சீரகத்தைப் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
காலையில் எழுந்தவுடன், எடை இழப்புக்கு அந்த ஜீரக தண்ணீரை கொதிக்க வைத்து, தேநீர் போல குடிக்கவும்.
இதனால் ஏற்படும் அதிசயத்தை விரைவில் உணரத் தொடங்குவீர்கள்.