கொழுப்பை எரித்து 21 நாட்களில் இடுப்பழகை பெற வேண்டுமா? இதை செய்தால் போதும்
உடல் எடை என்பது தற்போது இருக்கும் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த உடல் எடைப்பிரச்சனைக்கு முழுக்காரணம் நம்முடைய வாழ்க்கை முறை தான். நாம் ஒரு வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒவ்வொரு பழக்கவழக்கமும் நம்முடைய ஆரோக்கியத்தில் முக்கித்துவம் வகிக்கிறது.
உடல் எடை அதிகரிக்க நம்முடைய உணவுப்பழக்கவழக்கம் தான் முழுக்காரணமாகும். இந்த காரணத்தினால் நாம் தினமும் சாப்பிடம் உணவில் கவனம் வெலுத்த வேண்டும். ஆனால் உடல் எடை குறைப்பது அவவளவு சுலபமான விஷயம் அல்ல.
இதற்கு நாம் ஜிம் உடற்பயிற்ச்சி செய்தால் மட்டும் போதாது. வாழ்க்கையில் சில பழக்க வழக்க முறைகளையும் பின்பற்ற வேண்டும். அது என்னென்ன பழக்கங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எடை குறைப்பு
தற்போது அதிகமாக வெளி உணவுகளை அனைத்து மக்களும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். இது உடல் நலத்திற்கு கேடு தரும். பெரும்பாலான கடை உணவுகள் பழைய எண்ணெய்களை பயன்படுத்துவார்கள்.
இதில் கெட்ட கொழுப்பு அளவு மிகவும் அதிகமாக இருக்கும். இந்த காரணத்தினால் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் சாப்பிடுவதை நிறுத்தினாலே கெட்ட கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
வீட்டில் ஆரோக்கியமான உணவு, உடல் எடையை குறைக்க உதவுவதோடு, நோயற்ற வாழ்விற்கும் வழி வகுக்கும். நாம் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க காலை உணவை கட்டாயமாக எடுக்க வேண்டும்.
அப்படி எடுத்துக்கொள்ளும் எண்ணை அதிகமான உணவுகளை எடுக்க கூடாது.காலை உணவு, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். அதில் புரதம் முதல் கொழுப்பு வரை அனைத்தும் இருக்க வேண்டும்.
அதில் பருவ கால பழங்கள் மற்றும் காய்கறிகள் அவசியம் இடம் பெற வேண்டும். மதிய உணவு உண்ணும் போது அதில் பழங்களும் காய்கறிகளும் கட்டாயமாக இருக்க வேண்டும். இதன் பின்னர் குறைந்த கலோரி கொண்ட எளிதில் ஜீரணிக்க கூடிய வகையான மதிய உணவு, உடலுக்கு சோம்பலை தராமல் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
மதிய உணவிலும் காய்கறிகள் பருப்பு வகைகள் அதிக அளவிலும், அரிசி கோதுமை உணவுகள் குறைந்த அளவிலும் இருப்பது நல்லது. இது தவிர காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி அல்லது உங்களுக்கு ஏற்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்வது முக்கியம்.
மாலையில் முடியவில்லையென்றால் இரவு உணவு சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடப்பது நல்லது. உடல் எடையை குறைக்க சரக்கு பொருட்களை சாப்பிடுவது நல்லது. இஞ்சி, சீரகம், இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், செலரி சேர்த்த நீரில் ஏதாவது ஒன்றை குடித்து வரும் பழக்கத்தை கடைபிடிக்கலாம்.
இதன் மூல, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் செரிமானம் மேம்பட்டு, உடல் எடையை குறைக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |