இந்த கஞ்சியை வாரத்தில் 3 முறை குடிங்க - உடலில் கெட்ட கொழுப்பு மெழுகாய் கரையும்
உடல் எடையைக் குறைக்க முயற்சித்து வருகிறீர்களா? அப்படியானால், உணவுப் பழக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
குறிப்பாக, உடலில் தேங்கியுள்ள அத்தியாவசியமல்லாத கொழுப்புகளை கரைக்கும் வகையில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வகையில், காலையில் சத்துக்கள் நிறைந்த ஒரு கஞ்சியைச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக்கூடியது. இது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதுடன், எடையையும் தூக்கமாகக் குறைக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
உடல் எடையைக் குறைக்க உதவும் ஏராளமான கஞ்சிகள் உள்ளன. அதில் ஒன்று தான் முருங்கைக்கீரை கொள்ளு கஞ்சி. இந்த கஞ்சியை வாரம் 3 முறை குடித்து வந்தால், உடல் எடை சட்டினு குறையும்.
தேவையான பொருட்கள்
- புழுங்கல் அரிசி - 1 கப்
- கொள்ளு - 1/4 கப்
- முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- வெந்தயம் - 4
- பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - 5 கப் + தேவையான அளவு
பருப்பு துவையலுக்கு
- துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 1
- பூண்டு - 2 பல்
- துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் புழுங்கல் அரிசியை சுமார் 10 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து வைக்கவும். அதற்கிடையில், ஒரு வாணலியில் கொள்ளு பருப்பை சேர்த்து, நறுமணம் வரும் வரை நன்கு வறுத்து, பின்னர் அதைப் பக்கமாக வைக்கவும்.
பிறகு, குக்கரில் ஊற வைத்த அரிசியை இரண்டு முறை கழுவி சேர்க்கவும். அதனுடன் வறுத்த கொள்ளு பருப்பையும் சேர்க்க வேண்டும்.
அதன்பின் முருங்கைக்கீரை, சீரகம், தட்டி வைத்த மிளகு, வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து, 5 கப் நீர் ஊற்றி குக்கரை மூடி, 4 முதல் 5 விசில்கள் வரும்வரை வேகவைக்கவும்.
விசில் அடைந்ததும், குக்கரைத் திறந்து உப்பு சேர்க்கவும். கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், தேவையான அளவு சுடுநீரைச் சேர்த்து நன்கு கிளறவும்.
இவ்வாறு சுவையான முருங்கைக்கீரை–கொள்ளு கஞ்சி தயார்! இந்த கஞ்சிக்கு சைடு டிஷ் ஆக பருப்பு துவையல் சிறந்த தேர்வாக அமையும்.
இதற்கு ஒரு வாணலியில் துவரம் பருப்பை சேர்த்து, நன்கு வறுத்து ஆறவைக்கவும். பின்னர், வரமிளகாயை நேரடி நெருப்பில் சுட்டு எடுத்துக்கொள்ளவும்.
பின் மிக்ஸியில் வறுத்த துவரம் பருப்பு, சுட்ட வரமிளகாய், பூண்டு பற்கள், துருவிய தேங்காய், ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்புடன் சிறிதளவு நீர் சேர்த்து, கொரகொரவென அரைத்தால் பருப்பு துவையல் தயார். இதை வாரத்திற்கு முன்று முறை குடித்து வாருங்கள் உடல் எடை நன்றாகவே குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
