இலங்கை கிரிக்கட் மைதானத்தில் நுழைந்த பாம்பு : வைரலாகும் காணொளி
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் போது, இரண்டாவது இன்னிங்ஸின் 2.4 ஓவருக்குப் பிறகு எதிர்பாராத வகையில் ஒரு விஷப் பாம்பு மைதானத்துக்குள் நுழைந்தது சம்பவம் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் போது, இரண்டாவது இன்னிங்ஸின் 2.4 ஓவருக்குப் பிறகு எதிர்பாராத வகையில் ஒரு விஷப் பாம்பு மைதானத்துக்குள் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வால் சிறிது நேரம் போட்டி தடைபட்டது. அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் வீரர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக செயலில் இறங்கி பாம்பை பாதுகாப்பாக அகற்றினர்.
இலங்கை பல்வேறு வகையான பாம்புகளுக்குப் பெயர் பெற்ற நாடாகும். இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளின் போது அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
