உடல் எடையை குறைக்க உணவை குறைக்க வேண்டாம் இதை குடித்தால் போதும்...
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் உணவை குறைக்காமல் எப்படி எடையை குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உடல் எடை
பலரும் உடல் எடை அதிகமானால் தங்களை தாமே குறைமதிப்பிட்டு கொள்கின்றனர் . இதனால் மனவுளச்சல் அடைவார்கள்.பிடித்த ஆடைகள் அணிய முடியாமலும், பிடித்த உணவுகளை உண்டால் உடல் இன்னும் பருமனாகி விடுமோ என்ற அச்சத்தால் பிடித்த உணவுகளை உண்ண முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த எடையை குறைக்க யோகா செய்வது, உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று ஆலோசனை பெற்று உடல் எடையை குறைப்பது, உணவுகளை அளவாக எடுத்துக்கொண்டு எடையை குறைப்பது என பல்வேறு முயற்சிகளை எடுத்து உடல் எடையை குறைக்க முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் அவசியமில்லை. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு சிறியதாக பட்டை சேர்த்து, நன்றாக இஞ்சியை தட்டி போட்ட பிறகு கிராம்பினை சேர்த்து நன்றாக ஒரு கிளாஸ் தண்ணீர் அரை கிளாஸ் தண்ணீர் ஆகும் வரை அதனை கொதிக்க வைக்க வேண்டும்.
இதன்பின்பு அதனை வடிகட்டி எடுத்து அதில் ஒரு ஸ்பூன் மிளகு தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் ஆகியவை சேர்த்து, கொஞ்சமாக எழுமிச்சை சாற்றினை பிழிந்து நன்றாக கலக்கி தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்து வந்தால் விரைவில் உடல் பருமனை குறையும். இதற்காக நீங்கள் பயிற்சியோ உணவையோ குறைக்க தேவை இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
