உடல் எடையைக் குறைக்கவே முடியவில்லையா? இந்த பிரச்சினை கூட காரணமாம்
தற்பேதைய காலக்கட்டத்தில் உடலை நன்கு ஃபிட்டாக வைத்திருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு வைத்திருக்க விடுவதில்லை உடலின் பருமன்...
ஆம் உடல் எடை அதிகரித்துவிட்டால், பல நோய்களும் தானாக வந்து விடுகின்றது. பின்பு உடம்பை குறைப்பதற்கு பல கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் ஜிம், உடற்பயிற்சி, டயட் என்று எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் உடல்எடை குறையாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
பல முயற்சிகள் எடுத்தும் உடல் எடை குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
உடல் எடை குறையாமல் இருக்க என்ன காரணம்?
நமது உடம்பில் பெரும்பகுதி தைராய்டு சுரப்பியின் சுரப்பை பொறுத்திருப்பதால், எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றது. எந்தவொரு முயற்சியும் உடல்எடையைக் குறைக்கவில்லை என்றால், நீங்கள் நிச்சயம் தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமாம்.
இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவும் இன்சுலினில் ஏதேனும் ஏற்றத்தாழ்வு இருந்தால் எடை அதிகரிக்கும்.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் ஒவ்வாமை ஏற்பட்டாலும் உடல் எடை அதிகமாகும். இதே போன்று ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டாலும் கொழுப்பு அதிகரித்து எடை அதிகரிக்கும்.
உணவை ஜீரணிக்க வைப்பதில் குடல் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இவையும் சரியாக செயல்படவில்லை என்றால் உடல் எடை அதிகரிக்கும்.
உடல் எடையைக் குறைப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்தும் பலன் இல்லை என்றால், இந்த பிரச்சினைகளில் ஒன்று கூட காரணமாக இருக்கும். ஆதலால் மருத்துவ பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |