உடல் எடை கடகடவென குறைய வேண்டுமா?... வெறும் சுடுதண்ணீர் போதுமாம்
எடை அதிகமா இருக்கு கண்டிப்பாக குறைச்சே ஆகணும் இந்த டயலாக்கை அதிகம் கேட்டுகொண்டிருக்கிறோம். எடை குறைப்பவர்கள் ஆரோக்கியமக சத்து குறையாமல் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.அதற்கு என்னவெல்லாம் சாப்பிடலாம் பார்க்கலாம்.
இன்று சுட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை அதிகப்படியான எடை. உயரத்திற்கேற்ப எடை இருந்தால் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை.
ஆனால் அதிகப்படியான எடை மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கும் போது அவை உடலிலும் பல நோய்களை உண்டாக்க தொடங்குகிறது.
இரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வரவைக்கிறது. வயதான பிறகு வரும் உபாதைகள் 30 வயது தொடரும் போதே வந்துவிடுகிறது.
இத்தகைய பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில் ஆரம்ப கட்டத்திலேயே உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யவேண்டும்.
சாப்பிட்டு முடித்ததும் வெந்நீர் குடித்துவந்தால் உடல் எடையைப் பற்றிய கவலையின்றி இருக்கலாம்.
மசாலாக்களில் பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.
மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கு அடுத்தடுத்து வழிகள் என்ன என்பதை இங்கே காணொளியில் பார்க்கலாம்.