உடல் எடையைக் குறைக்கும் நெல்லிக்காய் ரசம்... எப்படி செய்றதுனு தெரியுமா?
உடல் எடையைக் குறைக்கும் நெல்லிக்காய் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெல்லிக்காய்
ஆரோக்கித்தினை அள்ளித்தரும் கனிகளில் நெல்லிக்காயும் ஒன்றாகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அதிகமான மருத்துவ குணங்களும் இதில் அடங்கியுள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமாக பயன்படுத்தப்படும் நெல்லிக்காயில், நீர் சத்து, புரதம், நார் சத்து, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளது.
இதய ஆரோக்கியம், செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கின்றது. பிரகாசமான தோல் மற்றும் அழகைப் பாதுகாப்பதுடன், முடி வளர்ச்சியையும் அளிக்கின்றது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த பானமாக இருக்கின்றது.
புற்றுநோய் எதிர்ப்பு சக்தியையும், உடல் எடையைக் குறைக்கும் தன்மை மற்றும் ரத்தத்தை அதிகரித்து ரத்த சோகைக்கு தீர்வு அளிக்கவும் செய்கின்றது.
நெல்லிக்காயை ஊறுகாய், ஜுஸ் என்று சாப்பிட்ட நாம் தற்போது நெல்லிக்காயில் ரசம் எவ்வாறு வைக்கலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 4
தக்காளி - 1
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 4 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
பருப்பு - 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்

செய்முறை
முதலில் நெல்லிக்காயை வேக வைத்து, விதையை நீக்கி மசித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு மிளகு, சீரகத்தை கொரகொரப்பான அரைத்துக் கொள்ளவும். பாத்திரம் ஒன்றில் துவரம் பருப்பு, தக்காளி, மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இதில் மசித்து வைத்து நெல்லிக்காய் மற்றும் அரைத்த மிளகு சீரகத்தை சேர்த்து கலக்கவும். ரசம் நன்றாக கொதித்து முடித்த பின்பு இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்தால் நெல்லிக்காய் ரசம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |