பிரசவத்திற்கு பிறகு தொப்பை அதிகமாகி விட்டதா? விரைவில் குறைக்க இலகுவான வழிகள்
பொதுவாகவே தற்போதுள்ளவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினையே இந்த தொப்பை பிரச்சினைதான். அதை குறைப்பதற்கு அனுதினமும் பாடாய்படுவார்கள்.
மேலும் தொப்பை அதிகமாக இருந்தால் அது ஆரோக்கிய குறைப்பாட்டை உண்டாக்கும். அதிலும் குழந்தைப் பெற்ற பிறகு பெண்களுக்கு இன்னும் தொப்பையுடன் சேர்த்து உடல் எடையும் அதிகரித்து
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் டீ, காபி குடிக்கலாமா? இனி இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! ஆபத்தில் சிசு..
விடும். இதனால் பெண்கள் பெரும் அசௌகரியங்களை சந்திப்பார்கள். அந்த வகையில் பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் தொப்பையையும் உடல் எடையையும் குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பிரச்சினைகளில் இருந்து விரைவில் மாற்றம் பெற இந்த டிப்ஸ் போதுமானது.
பிரசவத்திற்குப் பிறகு தொப்பையை குறைக்க
பிரசவம் முடிந்து 6 இலிருந்து 8 வாரங்களின் பின்னர் மெதுவாக உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கலாம். வலி ஏற்படுமானால் அதனை நிறுத்திக் கொள்ளலாம்.
கலோரிகள் குறைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பருப்பு வகை என்பவற்றை எடுத்துக் கொண்டால் உடல் எடைக் குறையும்.
பிரசவத்திற்குப் பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் உடலில் உள்ள கொழுப்பு செல்கள் மற்றும் கலோரிகள் எரிக்கப்படும்.
பிரசவத்திற்குப் பின் அதிகரித்த தொப்பைக் கொழுப்பைக் குறைக்க ஓட்ஸ் தண்ணீர் குடித்தால் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
பிரசவத்திற்குப் பின்னர் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த கிரீன் டீயை காலை மற்றும் மாலையில் குடித்து வந்தால் தொப்பைக் குறையும்.
பிரசவத்திற்குப் பிறகு வெந்தயத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் தொப்பைக் குறையும்.
பிரசவத்திற்குப் பிறகு சுமார் ஆறு மாதங்களுக்கு சூடான நீரை குடித்தால் உடலில் வளர்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரித்து உடல் கொழுப்பை விரைவில் குறைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |