உடல் எடையை குறைக்க சூப்பரான இரவு உணவு: எப்படி செய்றது-ன்னு தெரியுமா?
பொதுவாக தற்போது இருப்பவர்களுக்கு இருக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சினைகளில் அதிக எடை பெறும் பிரச்சினையாக இருக்கின்றது.
அதிக எடையுள்ளவர்கள் டயட் என்ற பெயரில் உணவை கட்டுப்போக்காக சாப்பிடுவார்கள்.
இவ்வாறு எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவு நேர சாப்பாட்டை தவிர்த்து சூப் போன்ற திரவ உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது.
இதன்படி, பசியை கட்டுபடுத்தும் வகையில் உடல் எடையை குறைக்கும் சூப்பரான சூப் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வெண்ணை – 1 ஸ்பூன்
பூண்டு- ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம் நறுக்கியது
கேரட் – 2
கால்பிளவர்- 1
முட்டை கோஸ் -அரை பகுதி
உப்பு, தண்ணீர் - தேவையானளவு
கோதுமை மாவு- 2 ஸ்பூன்
பால் – 1 கப்
மிளகு பொடி – 2 ஸ்பூன்
சூப் செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக வெண்ணை சேர்த்து அதில் பூண்டு நறுக்கி போடவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், கேரட், காலிபிளவர், முட்டை கோஸ் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
வதங்கி கொண்டிருக்கும் பொழுது உப்பு மற்றும் ஒரு டம்பளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இதனை தொடர்ந்து இன்னொரு பாத்திரத்தில் வெண்ணை, கோதுமை மா, பால் ஆகியவற்றை சேர்த்து கரைத்து கொள்ளவும்.
சாஸ் பதத்திற்கு கரைத்து அதனை சூப்பில் இருக்கும் காய்கறிகள் வெந்ததும் சாஸ் கலந்து அதனுடன் மிளகு பொடி சேர்த்து கிளரவும்.
5 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான காய்கறி சூப் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |