வீட்டிலிருந்தபடியே உங்கள் எடையை குறைக்கலாம்!
பொதுவாகவே எல்லோருக்கும் உடல் எடை குறைக்க வேண்டும் என்பது பெரிய போராட்டமாக இருக்கும்.
ஆனால் எவ்வித கஷ்டமும் இல்லாமல் வீட்டிலிருந்தே இயற்கையான முறையில் குறைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் அனைவரும் உடல் எடையைக் குறைக்க நீங்கள் பல்வேறு வழிகளில் முயற்சித்திருப்பீர்கள்.
இனி இந்தப் பானங்களைக் குடித்துப்பாருங்கள்.
உடல் எடையைக் குறைக்க
* சிறிதளவு இஞ்சியை அரைத்து அதனுடன் சீரக தூள், தண்ணீர், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து செய்யப்படும் பானத்தை குடித்து வர உடல் எடை குறையும்.
* ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் 6-7 புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து, அதில் இரண்டு கரண்டி க்ரீன் டீயை போட்டு அதில் பாதியளவு எலுமிச்சை சாறு கலந்து வைத்து இந்த பானத்தை குடித்துவர உடல் எடை குறையும்.
* அன்னாசிப்பழ துண்டுகளை அரைத்து சாறு எடுத்து அதில் எலுமிச்சை சாறு, பிளாக் சால்ட் மற்றும் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து பானமாக குடித்து வந்தாலும் உடல் எடையை குறைக்கலாம்.
* கோப்பியில் குளோரோஜெனிக் உள்ளது, இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த பிளாக் கோப்பியில் ஆளிவிதைகளை கலந்து அதனுடன் சுவைக்காக டார்க் சாக்லேட் சேர்த்து குடித்து வர உடல் எடை குறையும்.
* ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து அதில் 2 கரண்டி இலவங்கப்பட்டை தூளை சேர்த்து ஆறவைத்து பின்னர் அதனுடன் 1 கரண்டி தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர உடல் எடை குறையும்.
இவ்வாறான இயற்கையான பானங்களை குடிப்பதனால் உங்கள் உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை குறைத்து உங்கள் உடல் ஆரொக்கியமாகவும் ஸ்லிம்மாகவும் இருக்கும்.