உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த தவறை செய்யாதீங்க! எச்சரிக்கை
இன்றைய காலத்தில் உடல் எடையினை குறைப்பதற்கு பலரும் வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், உடல் எடையை அதிகரிப்பதற்கும் சிலர் வழி தேடுவதுண்டு.
அவ்வாறு உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கான சில டிப்ஸினை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
உடல் எடையை எவ்வாறு அதிகரிப்பது?
உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவினையும், கொழுப்புசத்து நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
புரதச்சத்து நிறைந்த உணவினை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முட்டையின் வெள்ளை மிகவும் சிறந்தது. மஞ்சள் கருவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் அதனை தவிர்ப்பது நலமாயிருக்கும்.
வாழைப்பழம், பாதாம், திராட்சை, வால்நட்ஸ், பேரீச்சம்பழம் என்பவற்றை சாப்பிட்டு ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்.
அதிகமாக வேலை செய்யும் சிலர், உணவில் சரியான கலோரி உள்ள உணவினை எடுத்துக்கொள்ளாமல், தேவையான ஆற்றல் கிடைப்பதில்லை.
இவ்வாறு கலோரி குறைவான உணவினை உட்கொள்வதாலும், உடல் எடை குறைந்திருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவர்களின் பரிந்துரை படி புரோட்டின் பானத்தினை அருந்தலாம். மேலும் குறைவான கொழுப்பு உள்ள பால் அருந்துவதோடு, வாரத்திற்கு 3 தினங்கள் மீன் சாப்பிடுவது நல்லது.
நம்மில் பலரும் சரியாக உடல் உழைப்பு இல்லை என்றால் உடல் எடை அதிகரிக்கும் எண்ணத்தினை வைத்துள்ளனர். ஆனால் இந்த எண்ணம் தவறு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் உடற்பயிற்சி செய்வது, ஜிம் செல்வது இந்த பயிற்சியினையும் மேற்கொள்ள வேண்டும்.