4 கிலோவில் திருமண அழைப்பிதல் செய்து அசத்திய கோடீஸ்வரர்! விலை தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க!
இன்றைய காலத்தில் திருமணத்தின் போது பலரது கவனத்தை ஈர்ப்பதற்காக எதையாவது விசித்திரமாக மணமக்கள் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
ஆனால், பிரபல தொழிலதிபர் தன்னுடைய மகள் திருமணத்திற்கு செய்த விடயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. குஜராத்தில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் தன் மகன் திருமணத்திற்காக மிகப்பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
அதிலும் அவர் உருவாகியுள்ள திருமண அழைப்பிதழ் மக்களை விழிப்பிதுங்க வைத்துள்ளது.
ராஜ்கோட்-சௌராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மௌலேஷ்பாய் உகானி என்பவரின் மகன் ஜெய் உகானிக்கும், சோனால்பென் உகானிக்கும் நாளை முதல் 16 ஆம் திகதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது.

அதற்காக திருமண அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழ் 4 கிலோ மற்றும் 280 கிராம் எடை கொண்டதாக இருந்துள்ளது.
திருமண அழைப்பை உருவாக்குவதற்கான மொத்த செலவு ரூ.7,000 என்றால் நம்புவீர்களா? சுமார் ஏழு பக்கங்களைக் கொண்ட அட்டையில் மூன்று நாட்களுக்குத் திட்டமிடப்பட்ட திருமண விழாக்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று நாளும் முறையான திருமண விருந்து விருந்தினர்களுக்கு வழங்கப்படும். விருந்தில் ஒரு தட்டின் விலை ரூ.18,000 ஆகும். மேலும் இந்த அழைப்பிதழ் வந்த பெட்டியில் விலையுயர்ந்த பருப்பு வகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
முந்திரி, பாதாம், திராட்சை, சாக்லேட்டுகளும் அழைப்பிதழ் பெட்டியை அலங்கரித்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சி 26 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள உமைத் பவன் அரண்மனையில் நடைபெறுகிறது. இந்த அரண்மனை இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
உமைத் பவன் அரண்மனையில் ஒரு அறையைப் பெறுவது என்பது மிகவும் கடினம். ஏனெனில் இங்கு ஒரு இரவு தங்குவதற்கு ரூ. 50,000 செலவாகும்.
அதிலும் சில நேர்த்தியான அறைகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கூட செலவாகும்.
இந்த அரண்மனையில் ஹனிமூன் சூட் ரூமில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு ரூ.7.5 லட்சம் செலவாகும் என்று கூறப்படுகிறது.