திருமணம் முடிந்த சில மணிநேரத்தில் நிகழ்ந்த துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாப்பிள்ளை
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நின்று கொண்டிருந்த மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோலாகலமாக நடைபெற்ற திருமணம்
கர்நாடக மாநிலம் விஜயநகரா மாவட்டத்தை சேர்ந்த ஹோண்னூறு சுவாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றில் உறவினர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், திருமணம் முடிந்த பின்பு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

மயங்கிவிழுந்த மாப்பிள்ளை
வரவேற்பு நிகழ்ச்சியில் அசௌகரியமாக காணப்பட்ட மாப்பிள்ளை, அமர்வதும் எழுவதுமாய் இருந்து வந்துள்ளார். நெருங்கிய உறவினரிடம் நெஞ்சுவலிப்பதாக கூறிய நிலையில், அஜீரண கோளாறாக இருக்கலாம் என்று சோடா வாங்கி மாப்பிள்ளைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சோடாவைக் குடித்த மாப்பிள்ளை மயங்கி சுயநினைவின்றி கீழே விழுந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ரத்த அழுத்தம் குறைந்துவருவதாக கூறி வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு போகக் கோரியுள்ளார்.
ஆனால் செல்லும் வழியிலேயே மணமகன் உயிரிழந்துள்ளார். விழா கோலம் கொண்ட திருமண வீடு இறுதியில் துக்க வீடாக மாறி உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
