திருமணத்தில் ஜாலியாக நடனமாடிய நபர்! நொடியில் உயிரிழந்த சோகம்.. பகீர் காட்சி
திருமண மேடையில் நடனமாடி கொண்டிருந்த நபர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தில் நடனம்
சத்தீஸ்கர், பாலோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் ராஜ்குமார்(52). இவர் உருக்காலையில் பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், தனது உறவுப்பார பெண்ணின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அப்பொழுது திருமண நிகழ்வில் மிகவும் ஜாலியாக நடனமாடி பொழுதைக் கழித்தவருக்கு நொடியில் சோகம் ஏற்பட்டுள்ளது.
ஆம் மேடையில் மிகவும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து ஆடிய அவர், சில நொடிகளில் கீழே அமர்ந்தார். அமர்ந்த உடனே கீழே சாய்ந்து உயிரிழந்துள்ளார்.
கீழே சாய்ந்த அவரை மீட்டு, உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இவர் திருமண நிகழ்வில் துள்ளிக்குதித்து ஆடிய காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.