அமெரிக்காவில் நடந்த திருமணம்! இந்தியாவில் திரையரங்கில் கண்டு மகிழ்ந்த பெற்றோர்
அமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்தை இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு செய்து பெற்றோர்கள் உறவினர்களுடன் கண்டு மகிழ்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் திருமணம்
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பர்வத ரெட்டி - ஜோதி தம்பதியினரின் மகன் ரோஹித் ரெட்டி(23)க்கும், திருப்பதியை சேர்ந்த சீனிவாச ரெட்டி சுனிதா தம்பதியினரின் மகள் ரிஷிதா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
ரோஹித் அமெரிக்காவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், சுனிதாவும் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் எம்பிஏ படித்து வருகிறார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரது பெற்றோரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதோடு, திருமணம் செய்து வைக்க இருவீட்டினரும் ஏற்பாடு செய்துள்ளனர்.
4 ஆண்டுகளாக பிச்சை எடுத்த நபர்! மனைவிக்கு 90 ஆயிரத்தில் பரிசு
அமெரிக்க நேரப்படி மே 21 ஆம் தேதி (இந்திய நேரப்படி மே 22 ஆம் தேதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் இருவரின் பெற்றோருக்கு அமெரிக்கா சென்று வர விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சோகத்தில் ஆழ்ந்தனர்.
திரையரங்கில் ஒளிபரப்பான திருமணம்
திருமணத்தை காண அமெரிக்கா செல்ல முடியாத சூழ்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டராக கருதப்படும் வி செல்லுலாயிட் நிறுவனத்தின் வி ஏபிக் திரையரங்கத்தில் திருமண நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர் மணமக்களின் பெற்றோர்.
அமெரிக்காவில் மங்கள வாத்தியம் முழங்க ரோஹித் - சுனிதா திருமணம் நடைபெற, அவர்களது உறவினர் அனைவரும் அந்த காட்சியை நேரலையில் பார்த்து மணமக்களை வாழ்த்தினர்.
காலை வெறும்வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்! பாரிய ஆபத்தை ஏற்படுத்துமாம்
திருமணத்தில் நேரில் கலந்துகொண்ட உணர்வு கிடைத்ததாக இந்த தியேட்டருக்கு வந்த மணமக்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்தை காண செல்ல முடியாத சூழ்நிலையில், மணமக்களின் பெற்றோர் இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டரில் நேரலையாக திருமணத்தை ஒளிபரப்பிய சம்பவம் பலரையும் வியப்படைய செய்துள்ளது.