சாணக்கிய நீதி: இந்த குணங்கள் இருந்தால் வாழ்வில் அதிக பணத்தை சம்பாதிக்கலாம்..!
தனது அறிவாற்றல் மற்றும் தெளிந்த சிந்தனையால் உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை ஏராளமானவர்கள் பின்பற்றி வருகின்றனர். சாணக்கிய நீதியின் அடிப்படையில் குறிப்பிட்ட சில பழக்கங்களை கடைப்பிடித்தால் வாழ்வில் அனைத்து சவால்களையும், தடைகளையும் தகர்த்து வெற்றியடைவதுடன் நிதி ரீதியில் உச்சத்தை அடையலாம்.
அப்படி வாழ்வில் அதிக பணத்தை சம்பாதிக்க ஒருவரிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்புகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
தகுதிபாத்து கொடுப்பது
சாணக்கிய நீதியின் அடிப்படையில் பணத்தை கொடுக்கும் போது தகுதி அறிந்து கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் பணம் நல்ல விடயத்துக்கு பயன்படுகின்றதா என்பது குறித்த விழிப்புணர்வு இருப்பவர்கள் மட்டுமே வாழ்வில் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும்.
நோக்கம்
எந்த வேலையை ஆரம்பிக்கும் முன்னரும் நிச்சயம் இந்த மூன்று கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும். அதை ஏன் செய்ய வேண்டும், என்ன பலன் தரும், அதில் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் மட்டுமே அந்த விடயத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்கின்றார் சாணக்கியர். இந்த குணம் கொண்டவர்கள் நிச்சயம் வெற்றியடைவார்கள்.
வேலையை பாதியில் நிறுத்தக்கூடாது
சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு வேலையை செய்ய ஆரம்பித்த பின்னர் தோல்வி பற்றி ஒருபோதும் சிந்திக்க கூடாது. தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் கொண்டவர்கள் வேலையை பாதியில் விட்டுவிடுவார்கள். எடுத்த காரியத்தில் இறுதிவரை போராடும் குணம் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் அதிக பணத்தை சம்பாதிப்பார்கள் என்கின்றார் சாணக்கியர்.
எதையும் அதிகம் செய்ய வேண்டாம்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் எதையும் அளவுக்கு மீறி செய்ய கூடாது. சீதையின் அதிக அழகு தான் ராவணன் கடத்திச் செல்ல காரணமாக அமைந்தது, இராவணனின் அதீத கர்வமே அவரின் அழிவுக்கு காரணமானது, துரியோதனின் அதீத பேராசையே குரு வம்ச அழிவுக்கு காரணமானது.எனவே எந்த வேலையிலும் மிகைப்படுத்தலை தவிப்பது வெற்றியை கொடுக்கும் என்கின்றார் சாணக்கியர்.
நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டும்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் பணத்தை நேர் வழியில் சம்பாதிப்பவர்கள் மாத்திரமே வாழ்க்கை முழுவதும் அந்த பணத்தால் பலன் பெற முடியும். தவறான வழிகளில் சம்பாதிக்கும் பணம் குறுகிய காலத்துக்கு மட்டுமே நிலைக்கும். மேலும் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும். நேர்மையாக பணம் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வாழ்வில் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும் என்கின்றார் சாணக்கியர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |