சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா?
பொதுவாக தண்ணீர் என்பது எமது அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாதது. தண்ணீர் என்பது எமது உடலுக்கு மிக மிக தேவையானதொன்றாகும்.
ஆனால் எந்த நேரத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே உணவுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது. சிலர், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும் என்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனை நாம் சரியாக தெரிந்து கொண்டு குடித்தால் உடலில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
உணவு உண்டு சில நிமிடங்கள் கழித்த பின்னர் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். மாறாக உணவுக்கு இடையில் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா,
உணவுக்கு இடையில் தண்ணீர்
- செரிமாண சிக்கல்
- வயிற்று உபாதை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்
- அமிலத் தன்மைக்கு வழிவகும்
- நெஞ்செரிச்சல்
- உடல் பருமன் பிரச்சினை
- அடிவயிற்றில் தசைப்பிடிப்பு
- உமிழ் நீர் தட்டுப்பாடு
- நீரிழிவு பிரச்சினை
- இரத்த அழுத்த பிரச்சினை
போன்ற பிரச்சினைகள் ஏற்படும் இதனை தடுப்பதற்கு இலகுவான வழி என்னவென்றால், உணவுக்கு இடையில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க தினமும் உண்ணும் உணவில் உப்பை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவை நன்றாக மென்று விழுங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் இடையில் உண்டாகும் தாகத்தை தடுக்கும். மேலும் தண்ணீர் பருகுவதால் உண்டாகும் ஆரோக்கிய சிக்கல்களை தடுக்கவும் உதவும்.