பால் கெட்டுப்போவதை தடுக்க எளிமையான வழிகள் இதோ!
பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது.
மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது. பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது. பசும்பால் 90% நீர்தன்மையுடன் அடர்த்தி குறைவாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியது.
இதனால் தான் இதை குழந்தைகளுக்கு உணவாக கொடுக்கிறார்கள். இத்தனை நன்மைகள் நிறைந்த பால் எளிதில் கெட்டுப்போக கூடியது. இதை அப்படி கெட்டுபோக விடாமல் பாதுகாக்கும் வழிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பால் கெட்டுபோகாமல் இருக்க வழிகள்
பால் எப்படியும் 24 மணி நேரத்திற்கு முன்னரே கெட்டுபோக கூடிய ஒரு பொருள். பாலை சூடாக்குவது மிகவும் அவசியம். இதனால் பாலில் அதிக பாக்டீரியா வளர ஆரம்பிக்கும்.
இதை காய்ச்ச முன்னர் பாத்திரத்தை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் தான் பாலை அதில் ஊற்ற வேண்டும். இந்த பாலை ஒரு முறை மட்டும் கொதிக்க வைக்க கூடாது.
24 மணிரேநத்தில் சுமார் 3 அல்லது 4 முறை கொதிக்க வைக்க வேண்டும். அப்போது தான் பால் கெட்டுபோகாமல் இருக்கும். பால் கொதித்த பின்னர் அதை அப்படி முழுமையாக போத்தியவாறு மூடி வைக்க கூடாது.
இப்படி செய்தால் பாக்டீரியா வளர வழிவகுக்கும். இதனாலேயே பால் விரைவில் கெடடுப்போகின்றன. எனவே வடிகட்டி ஒன்றை பயன்படுத்தி அதன் மூலம் கொதித்த பாலை மூடி வைக்கலாம்.
பாலை கொதிக்க வைக்கும் போது அதில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்தால் பால் கெட்டுப்போகாது.
பால் வாங்கி ஒரு நான்கு மணி நேரம் கடந்தால் அந்த பாலை நீங்கள் கொதிக்க வைக்க வேண்டும் என்றால் அதில் ஒரு சிட்டிகை சோள மா சேர்த்தால் பால் கெட்டுப்போகாமல் இருக்கும்.
பால் கொதிக்க வைத்ததன் பின்னர் அதை அறை வெப்பநிலையில் வைத்து குளிர்விக்க வேண்டும். இதன் பின்னர் குளிர்பெட்டியில் வைத்தால் பால் கெட்டுப்போகாது.
பாலை குளிர்பெட்டியில் வைக்கும் போது தனியே வைப்பது அவசியம். அதை எலுமிச்சை தக்காளி போன்ற பொருட்களுடன் வைக்க கூடாது. இது பால் கெட்டுபோகாமல் பாதுகாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
