உடலுக்கு சூட்டை அதிகரிக்கும் உணவுகள்... கோடை காலத்தில் கட்டாயம் சாப்பிடாதீங்க
கோடை வெயிலில் உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை வெயில்
கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருக்கின்றது. இதனால் கடுமையான வியர்வை, செரிமான பிரச்சனை, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சில தருணங்களில் செரிமான பிரச்சனையும் கூட ஏற்படலாம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் தான்.
இந்த நேரத்தில் உடல் சூட்டை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்ப்பது அவசியமாகும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்கு மோர், எலுமிச்சை ஜுஸ், பழச்சாறு, இளநீர் இவற்றினை பருக வேண்டும்.
மேலும் உடல் சூட்டை கொடுக்கும் உணவுகளை தவிர்ப்பதால் பல உடல்நல பிரச்சனைகள் வராமலும் தடுக்க முடியும். ஆதலால் வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகள் உடலுக்கு சூட்டை கொடுக்கும் என்பதால் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக சிவப்பு இறைச்சியை சாப்பிடுவது மூளையில் வெப்பத்தை ஏற்படுத்தும் என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எண்ணெய்யில் பொரித்த உணவுகள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதுடன், உடல் சூடு அதிகமாவதுடன், நீர்ச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும்.
கடும் கோடை காலத்திலும் காபி டீ அதிகமாக பருகுவதை தவிர்க்கவும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதுடன், சோர்வு போன்ற தலைசுற்றல் பிரச்சனையையும் ஏற்படுத்தும். வாயு மற்றும் வயிறு உப்புசம், செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
காரமான மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை வயிற்றில் எரிச்சல் உள்ளிட்ட ஜீரண பிரச்சனையை அதிகரிக்கும்.
மது மற்றும் ஆல்கஹால் பானங்கள் உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது. எனவே, கடுமையான வெயில் காலங்களில் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |